Monday 29 September 2014

இயற்கை மருந்து!!!

குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து...
காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.
சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும...்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.
தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.
பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.
குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

வயிற்றின் நண்பன் தேன்

வயிற்றின் நண்பன் தேன்

இயற்கை அளித்த அருங்கொடை தேன். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். 70 வகையான வைட்டமின் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. தேனில் உள்ள சத்துகள் உடலில் உள்ள ஜீரண பாதையில் சுலபமாக கிரகிக்கும். தேன் ஏழு வகைப்படும். ஆனால் ஒரு தேனீ எந்த செடியில் இருந்து தேனை சேகரிக்கிறதோ, அதன் மருத்துவ குணத்தை பெற்றுவிடுகிறது.

1. கொம்பு தேன்,
2. மலைத்தேன்,
3. மரப்பொந்து தேன்,
4. மலைத்தேன்,
5. புற்றுத்தேன்,
6. புதிய தேன்,
7. பழைய தேன்
என பல வகை உள்ளன.

ஆனால், இவற்றில் மலையில் உள்ள மரம் செடிகளில் இருந்து சேரிக்கப்படும் தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு. பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் வெகு விரைவில் மருந்து உறிஞ்சப்பட்டு விடும். ரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல்படும்.

மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம். இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம் பழம் இரண்டையும் ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் குறையும். ஒரே டம்ளர் வெந்நீர் அல்லது சூடுபடுத்தப்பட்ட பாலில் மூன்று டீஸ் பூன் தேன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும். நோய் எதிர்ப்பு தன்மை பெருகி, உடல் ஆரோக்கியம் ஏற்படும். நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருகினால், ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.

தொடர்ந்து ஆறு வாரம் அருந்தினால் ரத்தத்தில் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை முற்றிலும் நீங்கி விடும். உடல் அழகையும், குரல் இனிமையையும் ஏற்படுத்தி தரும் குணம் தேனுக்கு உண்டு. வயிற் றுக்கு சிறந்த நன்பன் என்றால் அது தேன் தான். தினமும், 3 டீஸ்பூன் தேனை 100 மில்லி லிட்டர் வெந்நீரில் காலை அல்லது இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தினால், வயிற்றுப்புண், இரைப்பை அலர்ஜி, ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். குறிப்பாக அமிலத் தன்மையை கட்டுப்படுத்தி அல்சர் நோயை குணப்படுத்தும்.

சுத்தமான தேனை தேர்வு செய்வது எப்படி

சுத்தமான தேனில் மகரந்தம் கலந்திருக்கும். இடத்திற்கு இடம் இது மாறுபடும். இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறிவிடும். ஆறு மாதத்திற்கு தேனை வைத்திருந்து சாப்பிடலாம். தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோகச்சத்து உடலுக்கு ஏற்றது. சில சமயங்களில் தேனில் கலந்துள்ள மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

தேன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய சிறிதளவு தேனில், தீக்குச்சியை சில விநாடிகள் ஊற வைத்து துடைத்து தீப்பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரை கலப்படம் இல்லை என்பதை அறியலாம். அல்லது மை உறிஞ்சும் காகிதத்தில், செய்திதாளில் சிறிதளவு தேனை ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பேப்பர் தேனை உறிஞ்சாமல் இருந்தால் அது நல்ல தேன் என்பதை அறிந்து கொள்ளலாம்.