கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.
இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு இட்லி விருப்பமுடன் சாப்பிடத் தோன்று
....
வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
டயாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.
உப்பு அதிகரித்துவிட்டால்
குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்.
குழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.
பொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து விடலாம்.
தோசை சுடும்போது
தோசை மாவுடன் கொஞ்சம் சோள மாவு சேர்த்து தோசை சுட்டால் உடம்பிற்கு நல்லது. சாப்பிடவும் ருசியாக இருக்கும்.
ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
தக்காளி சூப் செய்ய
தக்காளி சூப் எப்படி செய்தாலும் சுவையாகத் தான் இருக்கும். ஆனால் அதில் அதிகமான மணம் இருக்க என்ன செய்யலாம்.
புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரைத்து அதனை தக்காளி சூப்புடன் சேர்த்தால் வாசன¨யாக இருக்கும்.
சுவையாக சமைக்க
கீரையை சமைக்கும் போது சர்க்கரையை சேருங்கள். சத்தும் போகாது. நிறமும் மாறாது.
முதலில் மிளகாய் வற்றலைத் தனியாக வைத்து மசித்துக் கொண்டு பிறகே மற்ற பொருள்களைச் சேர்த்து அரைக்க வேண்டும்.
சூப்பில் உப்பு அதிகமாகிவிட்டால் உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி போடுங்கள்.
அசைவ நாற்றத்தைப் போக்க
வெங்காயம் அல்லது அசைவம் சமைத்த பின்னர் நமது கைகள் மற்றும் நறுக்கப் பயன்படுத்திய கத்தியில் அசைவ நாற்றம் இருக்கும்.
அந்த அசைவ நாற்றத்தைப் போக்க எளிய வழி உள்ளது. அதாவது எலுமிச்சைப் பழ சாறை ஊற்றி கை மற்றும் கத்தியைக் கழுவினால் போதும். நாற்றம் போய்விடும்.
எளிதாக வெட்ட
கேக் மற்றும் பாவ்பன், பிரட் துண்டுகளை வெட்டும்போது சரியாக வெட்ட முடியாமல் போனால் அதற்கும் ஐடியா உள்ளது.
வெட்டுவதற்கு முன்பு, கத்தியை சூடான நீரில் போட்டு துடைத்துவிட்டு வெட்டினால் எளிதாக வெட்டுப்படும்.
மிக்ஸியில் அசைவம்
மட்டன் அல்லது சிக்கன் போன்று அசைவ உணவுகளை அரைக்க மிக்ஸி பயன்படுத்தப்பட்டால் அதில் அசைவ வாடை இருக்கும்.
அதனைப் போக்க மிக்ஸி ஜாரில் 2 பிரட் துண்டுகளைப் போட்டு அதனுடன் சிட்டிகை மஞ்சள் தூளையும் போட்டு அரையுங்கள். பிசுக்கும் வாடையும் போய்விடும்.
பருப்பு எளிதில் வேக வைக்க...
பருப்பு போட்டு செய்யும் சமையல் நம்மூரில் அதிகம். அதனை குக்கரில் போட்டுவிட்டால் எளிதில் வெந்து விடும்.
குக்கர் இல்லாமல் பாத்திரத்தில் வேக வைக்கும் போது அதிக நேரம் எடுக்கும். அதனை சமாளிக்க இதோ வழி...
பருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும். சீக்கிரம் வெந்து விடும்.
வெண்ணெயை முட்டையில் கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்தால் ருசியாக இருக்கும்.
குழம்பில் உப்பு கூடிவிட்டால் சிறு வாழைத்தண்டு அல்லது உருளை சாதத்தை போட்டு கொதித்ததும் எடுத்துவிடவும்.
உப்பு சேர்க்கும்போது
குழம்பு கொதிக்கும்போது உப்பு சேர்த்தல் நல்லது. ஏனெனில் குழம்பு அதிகமாக தண்ணீர் இருக்கும்போது நாம் உப்பு சேர்த்துவிட்டு பின்னர் அது சுண்டியதும் உப்பு உரைத்துவிடுவதில் இருந்து தப்பலாம்.
கீரை, வெண்டைக்காய் போன்றவை முழுவதுமாக வதங்கிய பிறகு உப்பு சேர்க்க வேண்டும். ஏனெனில் அது முழுவதுமாக வதங்கியதும் அதன் உண்மையான அளவு தெரியும்.
உப்புமாவிற்கு தண்ணீர் கொதிக்க வைக்கும்போதே நாம் எடுத்து வைத்திருக்கும் ரவையின் அளவிற்கு உப்பு சேர்த்துவிடலாம்.
சமையலில் காரம் அதிகமாக இருந்தால் எலுமிச்சைப் பழச்சாறு சேர்க்கவும். குழம்பில் உப்பு அதிகமாக இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.
ரொட்டியை போட்டு வைக்கும் டப்பாவில் நான்கு மிளகைப் போட்டு வைத்தால் ரொட்டி நமத்துப் போகாமல் இருக்கும்.
காய்களை வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் காய்கள் சீக்கிரம் வெந்துவிடும்.
நெய்யை உருக்கிய பின்னர்தான் சாப்பிட வேண்டும். கெட்டி நெய்யாக சாப்பிட்டால் ஜீரணமாவது கடினமாக இருக்கும்.
கேசரி செய்யும் போதும் தண்ணீரின் அளவைக் குறைத்து பால் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
கீரையை வேகவைக்கும் போது மூடி போட்டு வைக்கக்கூடாது. அவ்வாறு மூடி வேகவைத்தால் நிறமும் மணமும் மாறிவிடும்.
முளைக்கீரையை வேகவைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்துக்கொண்டால் ருசியாக இருக்கும்.
பச்சரியில் கல் உப்பை சேர்த்து கலந்து வைத்தால் பூச்சி வராது.
காய்கறிகளை துணிப்பைகளில் போட்டு வைத்தால் அதனுடைய நீர் சத்து குறைந்துவிடும்.
பூரி செய்ய தயாரிக்கும் மாவை உடனே பயன்படுத்திவிட வேண்டும். அதிக நேரம் கழித்து பூரி சுட்டால் அதிகமான எண்ணெயைக் குடிக்கும்.
வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு குழம்பை இறக்கும்முன் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
சேமியாக, ஜவ்வரிசி பாயாசம் செய்த பின்னர் அதில் ஒரு டம்ளம் வெந்நீர் ஊற்றி வைத்தால் பாயாசம் கெட்டியாகாமல் இருக்கும்.
பஜ்ஜிக்கு மாவு கரைக்கும் கடலை மாவுடன், அரிசி மாவிற்கு பதில் இட்லி மாவு சேர்த்து கரைத்து பஜ்ஜி சுடலாம். சோடா மாவு சேர்க்காமலே பஜ்ஜி மிருதுவாக இருக்கும்.
கிழங்குகளை மூடி பாத்திரத்தில் வேகவைக்க வேண்டும். காய்கறிகளை திறந்த பாத்திரத்தில் வேகவைக்க வேண்டும்.
சப்பாத்தி, பூரி செய்வதற்கு கோதுமையை அரைக்கும் போது ஒரு கிலோவிற்கு கால் கிலோ வீதம் கொண்டைக்காலையோ அல்லது சோயாவோ சேர்த்து அரைத்தால் மேலும் சத்தான மாவு கிடைக்கும்.
முட்டைகளை தண்ணீர்ல் வைத்தால் நல்ல முட்டை பாத்திரத்தின் அடியில் இருக்கும். கெட்டுப்போன முட்டையின் குறுகிய முனை பாத்திரத்தின் அடியைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.
ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதைத் தவிர்க்கலாம்.
சில முட்டையை உடைத்து ஊற்றும்போது மஞ்சள், வெள்ளைக் கருவுடன் சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்று கலந்து இருக்கும். அப்படியிருந்தால் உபயோகிக்கக்கூடாது.
முட்டை தயார் செய்த பாத்திரங்களை குளிர்ந்த தண்ணீரில் ஊறப்போட்டு உடனே கழுவ வேண்டும்.
மஞ்சள் நிறம் கொண்ட எண்ணெய் மயமான கொழுப்புடையதும், உளம் ஊதா நிறம் கொண்ட மாமிசத்தையும் வாங்கக் கூடாது.
ஆற்று மீனின் சேற்று வாடை போவதற்கு மீனை உப்புப் போட்ட தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
உலர்த்திய மீனை சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி சில மணி நேரம் குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்கவும்.
மீனை கனமான துண்டுகளாக வெட்டி மிளகு, எலுமிச்ச பழச்சாறு, உப்பு சேர்த்து சுத்தமான காகிதத்தில் டால்டா தடவி அதில் மீனைச் சுற்றி இட்லிப்பானை ஆவியில் வேகவைத்து வெந்ததும் சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ஆட்டிறைச்சி புதியதாக இருந்தால் உறைந்த பாலாடை போன்ற கொழுப்போடும், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். உடைந்த எலும்பின் உட்பாகம் வெண்மையாக இருக்கும்.
கடினமான சமைக்காத கறியை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து ஊறவைத்தால் மிருதுவாகிவிடும்.
அசைவ சாப்பாடு சாப்பிட்ட பிறகு எலுமிச்சம் பழச்சாறு குடித்தால் எளிதில் ஜீரணமாகும்.
பால் காய்ச்சும் பாத்திரத்தை சுத்தமாக கழுவி வைக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒன்றும் பாதியுமாக கழுவினால் பால் கெட்டுப் போய்விடும்.
சிலர் வெறும் பாலைக் காய்ச்சி வைப்பார்கள். இப்படி வெறும் பாலை மீண்டும் மீண்டும் காய்ச்சினால் பால் கெட்டியாக கெட்டுவிடும்.
பாலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். கொதித்து வந்ததும் நன்கு கொதிக்கவிட்டு பிறகு அடுப்பை அணைக்கவும்.
பால் திரிந்து போய்விட்டால், தண்ணீரை வடிகட்டி விட்டு பாலை ஒரு வாணலியில் ஊற்றி, சிறிது சர்க்கரை சேர்த்து இளஞ்சூட்டில் கலக்கி கொண்டுவந்தால் திரட்டுப்பால் போன்று வரும். ஏலக்காய் பொடித்துப் போட்டு இறக்கி வைத்துக் கொண்டால் ருசியாக இருக்கும்.
பால் பாத்திரத்தில் சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் மாவும் மிதுதுவாக இருக்கும் பாத்திரமும் சுத்தமாகி விடுகிறது.
மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.
கீரை ருசியாக இருக்க வேண்டுமானால் கீரையை சிறிது சர்க்கரை கலந்த நீரில் ஊறவைத்து பிறகு சமைக்க வேண்டும்.
ஃகாலிபிளவர், முட்டைகோஸ் முதலியவற்றை வேக வைக்கும்போது ஒரு வித நாற்றம் வரும். அதைத் தடுக்க சிறிது எலுமிச்சம் பழச்சாறு, அல்லது ஒரு சிறிய இஞ்சித் துண்டை சேர்த்து வேகவைக்கலாம்.
மிக்ஸியில் இட்லி மாவு அரைக்கும் பெண்கள் அரிசி மாவு நன்றாக அரைபடவில்லை, நேரமாகிறது என்பார்கள். அவர்கள் கவலையை போக்க எளிய வழி புழுங்கள் அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் சுலபமாக அரைபடும்.
தேங்காய் பர்பி தயாரிக்கும்பொழுது சில சமயம் பதம் தவறி முருகி விடலாம். அப்படி நேரும்போது அதை பாலில் ஊற வைத்து, மீண்டும் கிளறி இறக்கும் சமயம் நெய்யில் வறுத்த கடலை மாவை சிறிது தூவி இறக்கினால், பர்பி மறுபடியும் சரியான பதத்திற்கு வந்துவிடும்.
சத்தான தோசைக்கு
தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு, 50 கிராம் வேர்க்கடலை 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
சில சமயங்களில் தோசை வார்க்கும்பொழுது எளிதில் வராமல் கிண்டிப்போகும். அப்போது தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கல்முழுதுவம் அழுத்தி தேய்த்திவிட்டு பிறகு வார்த்தால் நன்றாக வரும்.
சமைத்த சாதம் மிஞ்சிப் போய்விட்டால், அதைப்போல் இரண்டு பங்கு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பழைய சாதத்தை கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்பசை அகன்று புதிதாக சமைத்ததைப் போல் இருக்கும்.
வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
சாதம் தயாரானதும் சுடச்சுட அதில் ஒரு தேக்கரண்டி நெய் சேருங்கள். இது, சாதத்துக்கு ஓர் அருமையான மணம் கொடுக்கும்.
எலுமிச்சையிலிருந்து அதிகமான சாறைப் பெற அதை கையால் சமையல் மேடையில் நன்கு உருட்டித் தேயுங்கள். பின்னர் பிழியுங்கள்.
சோளத்தை அவிக்கும் போது அதன் இனிப்பை வெளிக்கொண்டு வர சிறிது சர்க்கரையைச் சேருங்கள்.
சப்பாத்திக் கட்டையில் மாவு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, மாவு தேய்ப்பதற்கு முன் சிறிதுநேரம் பிரீசரில் வைத்து எடுத்துப் பயன்படுத்துங்கள்.
கீரையை வேக வைக்கும்போது அதன் பசுமை நிறம் மாறாமலிருக்க ஆப்ப சோடா ஒரு சிட்டிகை போடவும். அல்லது கீரையை சமைப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து சமைத்தால் கீரையின் பச்சை வண்ணம் மாறாமல் இருக்கும்
சமையலறையில் முக்கியமாக இருக்க வேண்டிய பொருள் என்னவென்று கேட்டால் அடுப்பு, பாத்திரங்கள் என்றுதான் சொல்வார்கள். ஆனால் மின் விசிறி என்பது யாருக்கும் நினைவில் வராது.
ஆனால், ஒரு சமையலறையில் நிச்சயம் இருக்க வேண்டியது மின் விசிறியாகும். உள்ளிருக்கும் அனல் காற்றை வெளியே அனுப்பும் (எக்ஸாஸிட் ஃபேன்) மின் விசிறியை சமையலறையில் பொருத்த வேண்டியது மிகவும் அவசியம்.
வீட்டில் அனலை உருவாக்கும் ஒரு பகுதி என்றால் அது சமையலறைதான். எனவே, அப்பகுதியில் இருக்கும் அனலை வீட்டை விட்டு வெளியேற்றுவது மிகவும் அவசியமாகிறது.
சமையலறையின் அருகில் எப்போது நீங்கள் சமைத்துக் கொண்டிருந்தாலும், அப்போது இந்த மின் விசிறி இயங்கிக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது.
இதனால் சமையலறையில் நின்று பணியாற்றுபவர்களுக்கும் அனலினால் ஏற்படும் பாதிப்பு குறையும்.
அவலில் என்னென்ன செய்யலாம்
பொதுவாக அவல் என்பது அரிசியில் இருந்து செய்யப்படும் ஒரு உணவுப் பொருளாகும். அவலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை சிவப்பரிசியில் செய்யப்படும் அவல், மற்றொன்று சாதாரண அரிசியில் செய்யப்படுவதாகும்.
அவல் பொதுவாக உடலுக்கு நல்லது. அவலை வைத்து பல வகையான உணவுப் பண்டங்களை செய்யலாம்.
அதாவது, ரவைக்கு பதிலாக அவலை நன்கு வறுத்து சுடுதண்ணீரில் போட்டு எடுத்து அவல் உப்புமா செய்யலாம்.
இதேப்போல, அவலை நெய்விட்டு வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து கேசரியும் செய்யலாம்.
அவல் பாயாசம் எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியும்.
அவலை சுடுதண்ணீரில் போட்டு வேகவைத்து எடுத்து எலுமிச்சை சாதம் கூட செய்யலாம். மிகவும் அருமையாக இருக்கும்.
டீ கமகமவென மணக்க
டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணதோடு சுவையாக இருக்கும்.
மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது வெறும் வானலியை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு சற்று புரட்டி எடுத்து விட்டு எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.
தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்துமல்லியையும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
வெங்காய ஊத்தாப்பம் செய்யும்போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை செய்து எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
சமையலில் கவனிக்க வேண்டியவை
சமைக்கும் போது கடுகு, ஏலக்காய், சீரகம், கிராம்பு போன்ற மசாலா சாமான்களை தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள். அதிகமாக பயன்படுத்தினால் அவற்றின் சுவைதான் கூடுதலாக தெரியும்.
உருளைக்கிழங்குகளை சமைக்கும் போது அவைகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைப்பது நல்லது அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது அதன் நிறம் மாறுகிறது.
கோழியை துண்டாக்குவதற்கு முன் சிறிதளவு மஞ்சள் பொடியை தடவி 10 நிமிடம் கழித்து நறுக்கினால் மாமிசத்திலிருந்து வரும் ஒரு வகை துர்நாற்றம் இருக்காது.
உலர் திராட்சையை காற்றுப்புகாவண்ணம் இறுக்கமாக மூடிய பாட்டிலில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.
பருப்பு வேக வைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருப்பதோடு புரதமும் வெளியேறாது.
தண்ணீர் அளவு மிக முக்கியம்
சமையலில் எப்போதுமே உப்பும், தண்ணீரும் சரியான அளவில் இருப்பதுதான் மிகவும் முக்கியம்.
தண்ணீரை எவ்வளவு ஊற்ற வேண்டும், உப்பை எவ்வளவு போட வேண்டும் என்று தெரிந்து விட்டால் நீங்கள்தான் சமையல் உலகில் ராணி.
பொதுவாக குக்கரில் வெரைட்டி சாதம் செய்யும் போது அதில் நீங்கள் ஊற்றும் நீரின் அளவு சரியாக இருந்தால்தான் சாதம் உதிரியாக வெந்து இருக்கும். இல்லையேல், சாதம் குழைந்தோ அல்லது அரை வேக்காடாகவோ இருக்கும்.
இதுப் போலதான் உப்புமா, பொங்கல் போன்ற டிபன்களுக்கும் தண்ணீர் ஊற்றுவது மிகவும் சரியாக இருக்க வேண்டும்.
எப்போதும் ஒரே அளவில் அரிசி, பருப்பு, ரவை போன்றவற்றை போட்டு செய்யும் போது அதற்கான சரியான அளவை நீங்கள் ஓரிரு முறை சமைக்கும் போதே தெரிந்து கொள்ளலாம்.
குழம்போ, கூட்டோ தண்ணீர் அதிகமாக இருப்பின் அதனை எளிதாக மாற்றும் வழிகளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
சமையல் ருசிக்க சில குறிப்புகள்
வெங்காய சூப்பில் சிறிதளவு சீஸை சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும்.
சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வென்னீரில் பிசையவும். இறைச்சி மிருதுவாக இருக்க அதனை வினீகரில் சிறிது நேரம் வைத்தால் போதுமானது.
சாம்பார் பொடியை மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு விட்டால் சில நாட்கள் ஆன உடனேயே குணமும் மணமும் குறைந்து விடும்.
அதனால் கொஞ்சமாக அரைத்து வைத்து ஒரு பாலிதீன் கவரில் போட்டு வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவேண்டும். இதனால் சாம்பார் பொடி எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
கொத்த மல்லி இலைகளை நன்றாக ஆய்ந்து சுத்தமாக அலம்பி காய வைத்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
சமையலில் சேரும் வேண்டாத பொருட்கள்
தேங்காய் துருவும்போது ஓட்டு சத்தம் கேட்கும் வரையில் துருவக்கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.
எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியை வதக்கும் போது நன்கு தீயவிட்டு வதக்கக் கூடாது. பொன்னிறமாக சிவந்ததும் எடுத்துவிட வேண்டும். இதேப்போலத்தான் எண்ணெயில் பொரிக்கும் அனைத்துப் பொருட்களையும் தீயாமல் சமைக்க வேண்டும். தீய்ந்த உணவுப் பொருள், உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும்.
அஜினமோட்டோ நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதேப்போல ஆப்ப சோடாவையும் மிகக் குறைந்த அளவிற்குத்தான் பயன்படுத்த வேண்டும். இரண்டுமே வயிற்றைப் பாழாக்கிவிடும்.
ஒரே எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பொரித்தெடுக்கும் பஜ்ஜி, வடை போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம். இது உடல்நிலையை அதிகம் பாதிக்கும்.
வடை ரகசியங்கள்
வடை என்றால் எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. உளுந்து வடை, மசால்வடை, மிளகு வடை, உளுந்தையும், கடலைப் பருப்பையும் சேர்த்து செய்யும் வடை என பல வகைகள் உள்ளன.
ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விஷயம் முக்கியமாக இருக்கும். வடை சுடும் போது வடைக்கு அரைக்கும் மாவு மிகவும் தளர்த்தியாகவும் இருக்கக் கூடாது. மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
வடைக்கு ஊற வைக்கும் போது சிறிது பச்சரிசியும் சேர்த்து ஊற வைத்தால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
வடைக்கு அரைத்த மாவில் சிறிது ஆப்ப சோடா கலந்து வடை சுட்டால் வடை மிருதுவாக இருக்கும்.
வடையில் தயிர் வடை என்பது மிகவும் ருசியானது. தயிர் வடைக்கு வடை சுடும் போது அதிகம் சிவக்காமல் லேசாக சிவந்ததும் எடுத்து விட வேண்டும். தயிரை தாளித்து அதில் வடையைப் போடுவது சுவையை அதிகமாக்கும்.
உளுந்து வடைக்கு பொடியாக வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கினால் வடை அருமையாக இருக்கும்.