Saturday, 13 September 2014

உணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க!!!






உணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க மக்கள் எல்லாரும் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டனர்.





எந்த உணவுப் பொருளில் எத்தனை கலோரி சக்தி உள்ளது; கொழுப்புச் சத்து எவ்வளவு, புரோட்டீன் எவ்வளவு என்று அறிய ஆசைப்படுகின்றனர்.



அதற்கேற்ற வகையில் தங்கள் உணவுப் பழக்கங்களை வரையறை செய்திடவும் செய்கின்றனர். சில வேளைகளில் தாங்கள் எடுத்துக் கொள்ளும் இரண்டு உணவுப் பண்டங்களில் இந்த சத்துப் பொருட்கள் எவ்வளவு உள்ளன என்று அறிய விரும்புகின்றனர்.





அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஒரு உணவினைத் தேர்ந்தெடுத்து தங்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்கின்றனர்.





இவர்களுக்கு உதவுவதற்காகவே “twofoods” என்ற இணையதளம் இயங்குகிறது.





இதில் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் காண விரும்பும் இரண்டு உணவுப் பொருட்களை அருகருகே அமைத்து என்டர் செய்தால், அந்த உணவுப் பொருட்களின் சத்து விகிதம் தனித்தனியே காட்டப்பட்டு ஒப்பீடு





அட்டவணை கிடைக்கிறது. குறிப்பிட்ட அளவில் எவ்வளவு கலோரிகள், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரோட்டீன் சத்து உள்ளதாகக் காட்டப்படுகிறது.







இதனைக் கொண்டு நாம் நம் உடல்நிலைக்கேற்ப, அல்லது டாக்டரின் ஆலோசனைக்கேற்ப உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.





ஆப்பிள்/ஆரஞ்சு,

வெள்ளை / பிரவுண் அரிசி,

கோதுமை/அரிசி,

கேழ்வரகு /அரிசி



என எந்த வகை ஒப்பீட்டிற்கும் பதில் கிடைக்கிறது.



இதனைக் காண http://www.twofoods.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.