Friday, 19 September 2014

கத்தரிக்காய் சட்னி!!!(Brinjal chutney)

நாம் பார்க்க இருப்பது சட்னி வகை. இது வரைக்கும் இதை நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க வித்தியாசமா இருக்கும். சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்.

இட்லி, தோசைக்கு எத்தனை நாள் தான் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி செய்து போரடிப்பீர்கள். இந்த வித்தியாசமான சட்னியை ஒரு முறை ட்ரை பண்ணிப் பாருங்க!

சரி.. சரி இனி கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ? என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள் :-

கத்தரிக்காய் - 4
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
மிளகுத் தூள் - சிறிது
கடுகு - சிறிது
உளுத்தம்பருப்பு - சிறிது

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது.

செய்முறை:-

  • கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். 
  • வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
  • கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவவும் (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்). 
  • கத்தரிக்காய், தக்காளி இரண்டிலும் இரும்புச்சத்து அதிகமிருப்பதால், ரத்த சோகையைத் தடுக்கும். 
  • வாரம் இருமுறை ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டு எப்படி இருக்கறீங்கன்னு சொல்லுங்க...!