Monday, 15 September 2014

வதக்கு சட்டினி அல்லது கதம்ப சட்டினி!!!


வதக்கு சட்டினி அல்லது கதம்ப சட்டினி
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
கடுகு –சிறிதளவு
உளுந்தம்பருப்பு –சிறிதளவு
கடலைப்பருப்பு –சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
பச்சைமிளகாய் – 1
பெருங்காயம் – 2 துண்டு
கறிவேப்பிலை –சிறிதளவு
கொத்துமல்லி –சிறிதளவு
புதினா –சிறிதளவு
தேங்காய துருவல் – ¼கோப்பை
உப்பு –தேவையான அளவு
புளி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
பூண்டு – 5 பல்
செய்முறை:
சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்த்து பொறிய விடவும். பிறகு காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், வெங்காயம், நறுக்கிய தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, புளி, தேங்காய் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு சேர்த்து ஆறிய பின்பு அரைக்கவும். சுவையான கதம்ப சட்டினி தயார்.
உக்ரா
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கோப்பை
பாசிபருப்பு – 1 கோப்பை
வெல்லம் – 1 ½கோப்பை
ஏலக்காய் – 2
முந்திரிபருப்பு – 1 தேக்கரண்டி
நெய் – 50 கிராம்
செய்முறை:
பாசிபருப்பை வெறும் சட்டியில் பொன்னிறமாக வறுத்து வேகவைத்துக்கொள்ளவும்.
ரவையை சட்டியில் வறுத்துக்கொள்ளவும்.
வெல்லத்தை பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
சட்டியில் ரவையுடன் தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். வெந்ததும் பாசிபருப்பு, வெல்லம் இவற்றை சேர்த்து நெய் விட்டு நன்கு கிளறவும், இவற்றை ¼மணி நேரம் அடுப்பில் வைக்கவும். அதை அடிக்கடி கிளறவும். பின் தேங்காய் துருவல், ஏலக்காய், முந்திரிபருப்பு சேர்த்து இறக்கி விடவும். சுவையான உக்ரா தயார்

                                 
                         

                         
                                     
















கத்தரிக்காய் கொத்சு:இந்தச் செய்முறை சிதம்பரம் நடராஜர் கோவிலில் இறைப்பணி புரியும் தில்லை வாழ் அந்தணர்கள், தீட்சிதர்கள் என்றும் அழைக்கப்படுவர்களின் சமூகத்தில் மிகவும் பழக்கமான ஒன்று.
தேவையான பொருட்கள்:
கத்தாpக்காய் – ¼ கிலோ
மிளகாய் வற்றல் – 8
தனியா – 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
புளி – ஒரு சிறிய உருண்டை (நெல்லிக்காய் அளவு)
வெல்லம் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 200 மி.லி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் கத்தரிக்காயை நன்றாகக் கழுவி நீளதுண்டுகளாக செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலி வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய், தனியா, கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுக்க வேண்டும். மீண்டும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கத்தாpக்காயைப் போட்டு அரைப்பதமாக வதக்க வேண்டும். வதக்கிய கத்தரிக்காயையும், வறுத்து வைத்துள்ள சாமான்களையும் அரவை இயந்திரத்தில் (மிக்சியில்) போட்டு சற்றுக் கரகரப்பாக இருக்கும் படி அரைக்க வேண்டும். (தண்ணீர்விடக் கூடாது) மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகைத் தாளித்து பின் பெருங்காயத்தூள், உளுந்தம்பருப்பு சேர்க்க வேண்டும். இந்த எண்ணெயில் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு விடவேண்டும். புளியைக் கெட்டியாகக் கரைத்து இந்த விழுதின் மேல் போட வேண்டும். தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து விட வேண்டும். நன்றாக இந்த விழுதைக் குறைந்த தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும், எண்ணெய் பிரிந்து லேகியம் மாதிரி வரும் பொழுது எடுத்து, காற்றுப்புகாத டப்பாக்களில் வைத்தால் 4 நாட்கள் வரை கெட்டுப்போகாது. சாதம், தோசையுடன் மட்டும் சாப்பிட கத்தரிக்காய் கொத்சு நல்ல உணவு இது.


மாம்பழப் பச்சடிஇது மாம்பழ சீசன் அல்லவா, எல்லா வகைகளும், எல்லா அளவுகளிலும் கிடைக்கும் மாம்பழங்கள் இப்போது. சீசனில் கிடைக்கும் பழங்களை நாம் உபயோகிப்பதில் கொஞ்சம் வகைகளைப் பார்க்கலாமே!
தேவையான பொருட்கள்:
குட்டியான மாம்பழங்கள் – 6
மிளகாய் வற்றல் – 6
வெல்லம் – 50 கிராம்
கடுகு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி
தேவைக்கு உப்பு
வேகவைத்து தோல் உரித்து சிறு சிறு துண்டங்களாக செய்த உருளைக் கிழங்கு ஒன்று.
சோள மாவு – 1 தேக்கரண்டி
செய்முறை:
மாம்பழங்களை உப்பு நீரில் ஊறவைத்து பின் நன்றாகக் கழுவவும். தோலைச் சீவி மாம்பழங்களை முழுதாக ஒரு கனமான பாத்திரத்தில் போட வேண்டும். சீவிய தோலில் ஒரு குவளை (டம்ளர்) தண்ணீர் விட்டு நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். தோலை எடுத்து விட்டு அந்தத் தண்ணீரை மாம்பழத்தில் விட வேண்டும். எண்ணெயில் கடுகு, மிளகாய் வற்றலை கிள்ளித் தாளிக்க வேண்டும். தாளிப்பை மாம்பழத்தில் விட்டு மேலும் ஒரு குவளை (டம்ளர்) தண்ணீர் விட்டு உப்புச் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இதில் வெல்லத்தையும் போட்டு சோளமாவைக் கரைத்து விட வேண்டும். மாம்பழங்கள் நடுவில் இருக்க தீவு மாதிரி மாம்பழச் சாறு உப்பு, புளிப்பு, தித்திப்பு, காரம் என்று எல்லா சுவையோடும் சுற்றி நிற்கும். நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவ வேண்டும். வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகளையும் இத்துடன் கலக்க வேண்டும். பார்க்கவும் பாpமாறவும் அழகான ருசியான உணவு இது. சாப்பாட்டின் இறுதியில் பரிமாறப்பட வேண்டும்.