Friday 19 September 2014

தேங்காய் லட்டு!!!

இனிப்புகளில் லட்டு மிகவும் சுவையானது. அனைவராலும் விரும்பப்படுவது. வீடுகளில் சிறிய அளவில் சுவையான தேங்காய் லட்டு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையானப் பொருட்கள்:-

  • தேங்காய் - ஒன்றரை மூடி
  • கடலைமாவு - அரை கிலோ
  • சர்க்கரை - 800 கிராம்
  • முந்திரி - 25 கிராம்
  • ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்
  • தே.எண்ணெய் / நெய் - தேவையான அளவு

செய்முறை:-


  • சர்க்கரையை கெட்டிப்பதத்தில் பாகு காய்ச்சுங்கள். 
  • இரண்டு மூடி தேங்காயை துருவி பால் எடுங்கள். 
  • அந்தப் பாலில் கடலைமாவை கரைத்து தேங்காய் எண்ணெயில் பூந்தியாக போட்டு, பாகின் சூடு ஆறுமுன்னே அதில் கொட்டுங்கள். 
  • அரைமூடித் தேங்காயை சிறுசிறு பற்களாக வெட்டி, அதையும் முந்திரியையும் தனித்தனியாக தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பாகில் சேருங்கள். 
  • ஏலக்காயை உரித்து விதைகளையும் அதில் போட்டு அனைத்தையும் கெட்டியாக பிசைந்து உருண்டை பிடியுங்கள். 
  • தேவைப்பட்டால் வறுத்த லவங்கத்தை சேர்த்துக் கொள்ளலாம். சுடச்சுட சுவையான தேங்காய் லட்டு ரெடி!