Sunday, 28 September 2014

உடல் நலம் பற்றி அறிய பயனுள்ள தளம்!!!

உடல் நலம் பற்றிய அறிய பயனுள்ள தளம்
மனிதனாக பிறந்த அனைவருக்குமே உடல் நலம் பற்றிய ஒரு விழிப்புணர்வு இருக்கும் ஆனால் பல நேரங்களில் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு கூட்டங்களுக்கு சென்று பங்கேற்க நேரம் இருக்காது இப்படி பல விதமான காரணங்களினால் உடல் நலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் நமக்கு ஆன்லைன் மூலம் உடல் நலம் பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுக்க ஒரு தளம் உள்ளது
உடல் நலம் பற்றிய அறிய பயனுள்ள தளம்
அடிக்கடி தலைவலி வருகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை இப்படி நமக்கு எழும் பல விதமான காரணங்களுக்கு பதில்
அளிப்பதற்காகவும் உடல் நலம் மேல் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் வீடியோவுடன் பதில் சொல்ல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்திற்கு சென்று நாம் உடல் நலனில் நமக்கு எந்தப்பிரச்சினை தொடர்பாக வீடியோக்களை பார்க்க வேண்டுமோ அதை Search என்று இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம், அடுத்து வரும் திரையில் நாம் தேடிய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து வீடியோக்களும் வரும் மருத்துவரின் பதிலில் ஆரம்பித்து நோயாளியின் நேரடி அனுபவம் வரை அனைத்தையும் தெளிவாக காட்டுகிறது. பல்லில் இரத்தம் வருகிறது என்பதில் தொடங்கி கேன்சர் வரை அனைத்துக்குமான தகவல்களும் வீடியோவுடன் கிடைக்கிறது.இதைத்தவிர உடல் நலம் பற்றிய ஒவ்வொரு துறை சார்ந்த வீடியோக்களும் அழகாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் நம்மவர்களுக்கும் உடல் நலம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
தள முகவரி :- http://icyou.com/
Lik