Friday, 26 September 2014

வீடு கட்டப்போகிறீர்களா?!

வீடு கட்டப்போகிறீர்களா?

வீடு கட்ட ப்ளான் பண்ணுபவர்களுக்கு உதவும் இலவச மென்பொருள்!
நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D (http://www.sweethome3d.com/index.jsp)மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். மேலும் இது இலவசமாக கிடைக்கும் என்பதை நோட பண்ணிக் கொள்ளவும்
இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென் பொருளின் சிறப்பாக சொல்லலாம்.
கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது. நீங்கள் ஆட்டோகேட் அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்த வித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள் அனைத்தும் சென்டி மீட்டரில் உள்ளீடு செய்ய வேண்டும். 10 அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செ.மீ.க்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செ.மீ.
மேல் வரிசையில் plan மெனுவில் create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயரத்தை மாற்றிக் கொள்ளலாம்.
சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள். இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம். எடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றும் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம்.


Sweet Home 3D - Draw floor plans and arrange furniture freely
Free interior design software. Draw the plan of your home or office, test furniture layouts and visit the results in 3D.
SWEETHOME3D.COM