ஈரலை எவ்வாறு சுத்தம் செய்வது என பார்ப்போம்.
உலர்ந்த முந்திரி எனப்படும் கிஸ்மிஸ் உங்கள் ஈரலை சுத்தப்படுத்தும் ஒரு எளிய மருந்தாகும்.
காலையில் எழுந்தவுடன் அரை கப் உலர்ந்த திராட்சயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவ்வும். மறுபடியும் சூடாக்கி ஆறவைத்த தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்த நாள் காலையில் முதலில் வெறும் வயிற்றில் ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும். அத்துடன் ஊறவைத்த உலர்திராட்சையைய
ும் சாப்பிடவும். பிறகு படுக்கையில் ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஒரு பாட்டிலில் மிதமான சூடு தண்ணீர் நிறைத்த ஹாட் வாட்டர் பேக் அல்லது பாட்டில் கொண்டு வலது பாகம் வயிற்றில் சூடுபடும் படியாக கிடந்து ஒய்வெடுக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் வீதம் ஒரு மாதம் செய்யவும். இந்த முறையில் வருடத்தில் இரண்டு தடவை மட்டும் செய்ய வேண்டும். அதற்க்கு மேல் செய்யக்கூடாது.
ஈரல் பாதிப்பு நீங்க மற்றொரு எளிய மருந்து:
ஈரல் நோயைக் குணப்படுத்த, சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், ஈரல் நோய் குணமாகும்.
வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும் நல்ல முறையில் வாழ்ந்து சாதிப்போம்...!
விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம்..!
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம்..!
இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்வோம்..!
நீண்ட ஆயுளும் உடல் முழு ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம்!
No comments:
Post a Comment