Sunday, 21 September 2014

ஆண் குழந்தையா என்பதை அறிய வழிகள் !!!

கர்ப்பிணி சகோதரிகளே!
உங்கள் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா என்பதை
அறிய வழிகள் தெரிந்து கொள்ளுங்களேன்...
அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள்.
இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம்.
இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்.
இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
• வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்பதை கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே அறியலாம்.
எப்படியெனில், வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்குமாம்.
• நிறைய கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறத்தைப் பார்ப்பார்கள்.
ஏனெனில் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.
இதைக் கொண்டும் அக்காலத்தில் உள்ள மக்கள் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு வந்தார்கள்.
• கர்ப்பத்தின் போது, மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். அதிலும் உண்மையாக இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக ஆரம்பிக்கும்.
ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், இடது மார்பகத்தை விட வலது மார்பகத்தின் அளவு பெரிதாக இருக்குமாம்.
• கர்ப்ப காலத்தில் எப்போதும் பாதம் குளிர்ச்சியாக இருந்தால், அதுவும் ஆண் குழந்தை பிறக்கும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
• ஒவ்வொரு முறை மருத்துவரை சந்திக்கும் போதும், குழந்தையின் இதயத்தின் துடிப்பை கண்காணித்து வாருங்கள்.
ஏனெனில் குழந்தையின் இதயத்தின் துடிப்பானது 140-க்கு கீழே இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.
• வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று தான் கூந்தலின் வளர்ச்சி.
கர்ப்ப காலத்தில் கூந்தலின் வளர்ச்சியானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
• கர்ப்பமாக இருக்கும் போது உணவுப் பொருட்களின் மீது ஆசை எழுவது சாதாரணம் தான்.
ஆனால் புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகமாக இருந்தால், அது வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது என்று அர்த்தம்.
• கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோர்வு இருக்கும்.
இருப்பினும்., அப்படி சோர்வுடன் இருக்கும் போது, இடது பக்கத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
எவ்வளவு தான் க்ரீம்களை கைகளுக்கு தடவினாலும், கைகள் வறட்சியுடனும், வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தாலும், அதுவும் ஆண் குழந்தை தான் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று..