Thursday, 25 September 2014

டாங்கர் பச்சடி!!!

வெயிலை இதமாக்கும் டாங்கர் பச்சடி!



இதுவும் ஒரு பண்டையகால சுலபமான பச்சடி அதிக சாமான்களில்லாமலே சட்டென செய்யக்கூடிய ஒரு பச்சடி. கூட்டு, துவையல், பொடிகள் போட்டு சாப்பிடும்போது, இது இசைவாக உடன் சாப்பிட எளிதாகயிருக்கும். சாப்பாட்டு வகைகளிலே இதற்கும் ஒரு அங்கமுண்டு. இரண்டு அப்பளாம் வடாத்தைப் பொரித்து, நேரமில்லாத வந்த விருந்தாளிகளுக்கு, பருப்புத் துவையலுடனோ, பருப்புப் பொடியுடனோ, இந்தப் பச்சடியையும் செய்து,
ஊருகாய், தயிருடன் உணவளித்து அப்பொழுதைய பசிக்கு விடை கொடுத்து, அனுப்பி விட்டு. சாவகாசமாக நல்ல சமையல் துவக்குவது, எல்லோருமாக சுவைத்து சாப்பிட அருமையாக சமைப்பது எல்லாம் வழக்கத்திலிருந்தது.
பண்டையகாலம் இப்படிதானிருந்தது. இப்படிதான் ருசித்தது..
பச்சடியையும் செய்வோம். பிறகு பருப்புப் பொடியையும் செய்வோம்.
வேண்டியவைகள்
1. வெள்ளை உளுத்தம் பருப்பு-இரண்டு டீஸ்பூன்
2. தயிர்- ஒரு கப்
3. பச்சை மிளகாய்-ஒன்று
4. ருசிக்கு-உப்பு
5. தாளித்துக் கொட்ட-எண்ணெயும்,சீரகமும், கடுகும்
6. ஒரு துளி ஓமம், பிஞ்சு வெள்ளரிக்காய் -தேவைக்கு.
P1020737
நான் இதனுடன் வெள்ளரிப் பிஞ்சு சேர்த்து இன்னும் ருசியாகச் செய்து பார்த்தேன். நீங்களும் செய்து பாருங்கள்.. தனியாக பருப்புப்பொடி சாத்ததுடன் சாப்பிட இசைவாக காயும் சேர்த்த மாதிரி ஆகும்.. எனக்குத் தெரிந்து ருசியும் கூடுதலாக இருக்கும்.