Tuesday 16 September 2014

கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உயிர்ச்சத்துள்ள உணவுகள்!!!.



 
 

        




கர்ப்பிணியாக உள்ள பெண்கள் தங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வாழ உண்ண வேண்டிய உயிர்ச்சத்துள்ள உணவுகள்.
1. கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து)
*. பருப்பு
*. பட்டாணி
*. தானியத் தயாரிப்புகள்
*. சாக்லேட்.
2. கொழுப்புச்சத்து (மாவுப்பொருளை விட அதிகச் சத்து)
*.  வைட்டமின் ‘எ’
*.  வைட்டமின் ‘டி’
*.  வைட்டமின் ‘இ’
*.  வைட்டமின் ‘கே’
போன்ற சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
3.புரோட்டீன்கள்:
இது புரதச்சத்தாகும். குழந்தைகளின் திசு வளர்ச்சிக்கு புரோட்டீன்கள் என்ற புரதச்சத்து மிக பயன்படுகிறது.
4. வைட்டமின் ‘எ’:
- பச்சைக் காய்கறிகள்
- பழங்கள்
- வனஸ்பதி எண்ணெய்
- பால்
எலும்பு வளர்ச்சிக்கும், பல் வளர்ச்சிக்கும், இரவில் பார்வை நன்றாகத்  தெரிவதற்கும் இந்த ஊட்டச் சத்துக்கள் பயன்படுகிறது.
5. வைட்டமின் ‘டி’:
-முட்டையின் மஞ்சள் கரு
-ஈரல்
-குறிப்பிட்ட சில மீன்கள்
-சூரிய ஒளி
-இவைகள் குழந்தையின் எலும்பு உருவாக்கத்திற்கும், பல் முளைக்கவும் பயன்படும் ஊட்டச்சத்தாகும்.
6. வைட்டமின் ‘இ’:
-பச்சை நிறக் காய்கறிகள்
-கீரைகள்
-தானியங்கள்
-கொட்டைகள்
-மஞ்சள் கரு
இவைகள் குழந்தைக்கும், தாய்க்கும் தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கவும், செல் சவ்வுகளின் ஒருங்கிணைப்பிற்கும் பயன்படும்.
7. வைட்டமின் ‘கே’:
-கீரைகள்
-காய்கறிகள்
-உருளைக்கிழங்கு
-பன்றி ஈரல்
இவைகள் ரத்த விருத்திக்கும், ரத்த உறைவுக்கும் பயன்படுகிறது.
8. வைட்டமின் ‘பி’:
-பால்
-ரொட்டிகள்
-மொச்சை
-முட்டை
இவைகள் குழந்தையின் உரு வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
இதில் இறைச்சி மட்டும் வைட்டமின் பி-12 சத்தாகும்.
9. போலிக் அமிலம்:
- பச்சைக் காய்கறிகள்
- கீரைகள்
- ஈரல்
- அவரை
- கொட்டைகள்
- தானியங்கள்
இவை தாயின் ரத்த அளவை அதிகரிக்கவும், குழந்தையின் நரம்புக் குறைபாடுகளைத் தவிர்க்கவும் பயன்படுகிறது.
10. வைட்டமின் ‘சி’:
-ஸ்ராபெரி
-அன்னாசி
-கொய்யா
-தக்காளி
-காய்கறி
இவைகள் எலும்பு, பற்கள் உறுதிக்குப் பயன்படுகிறது. மேலும் தொற்றுநோயை எதிர்க்கவும், உடல்திறன் அதிகரிக்கவும் பயன்படுகிறது.
11. கால்சியம்:
(கர்ப்ப காலத்தில் இறுதியில் மூன்றில் இரண்டு மடங்கு இது தேவை)
-பாலாடை
-முட்டை
-ஓட்ஸ்
-பால், காய்கறி
இவை எலும்பு, பல் உறுதிக்கும், இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்தத் தேவை. இதில் ஒரு டம்ளர் பாலில் 1200 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
12. பாஸ்பரஸ்:
-முட்டை
-பாலாடை, பால்
-இறைச்சி
-காய்கறி
இவை உடலில் உள்ள செல் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
13. இரும்புச்சத்து:
-காய்கறிகள் -கொட்டைகள்
-கீரைகள் -உலர் திராட்சை
-வெல்லம் -முட்டை
-பட்டாணி -நண்டு
-பீன்ஸ்
இதோடு ஒரு டம்ளர் ஆரஞ்சுப் பழச்சாறு.
இந்த வகை உணவுகள் முதல் 3 மாதத்திற்கும், இறுதி 3 மாதத்திற்கும் கர்ப்பிணி பெண்களுக்குத் தேவை. இவை குழந்தை , தாயின் எல்லா வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.
14. அயோடின் சத்து:
-அயோடின் கலந்த உப்பைத் தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
15. துத்தநாகம்:
-பால்
-மீன்
-மஞ்சள்கரு
-புரதச்சத்து
-இவைகளைக் குறைவாக உண்டால் கருப்பையில் இருக்கும் குழந்தை குறை வளர்ச்சி பெறும், மேலும் அதன் வாழ்நாள் குறைந்து போகும். இதன் குறைபாட்டால் பிறவிக் குறை நேரும். நீண்ட நேர பிரசவ வலி ஏற்படும்.
16. நீர்ச்சத்து:
-தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
-பழச்சாறு சாப்பிடலாம்
-டீ, காபி தவிர்ப்பது நல்லது.
உணவு ஜீரணமாகவும், ஊட்டச்சத்து கடத்துவற்கும், கழிவுகள் வெளியேறவும், உடல் வெப்பம் குறையவும் இவை தேவைப்படுகிறது.
17. எடை கண்காணிப்பு:
-கருக்காலத்தில் உடல் எடையோடு 10 கிலோ, 12 கிலோவுக்கு மிகாமல் கர்ப்பிணிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-தாயின் எடை உயராமல் இருந்தால், அது குறைப்பிரசவம் ஆகும். அல்லது கர்ப்ப காலத்திலேயே குழந்தை இறந்து விடும்.
18. கர்ப்பகால உணவு முறைகள்:
1.தானியங்கள் -35 கிராம் தேவை -118 கலோரி
2.பருப்புகள் -15 கிராம் தேவை          -52 கலோரி
3.பால் -100 கிராம் தேவை                  -83 கலோரி
4.கொழுப்பு -தேவை இல்லை
5.சக்கரை -10 கிராம் தேவை              -40 கலோரி
மொத்தம் 293 கலோரி தேவை
19.  48 கிலோ எடையுள்ள ஒரு கர்ப்பமான பெண் ஒரு நாளில் உண்ண வேண்டிய உணவு முறை:
காலை 7 மணிக்கு       –  டீ ஒரு கப், பேரிச்சம்பழம், மேரி பிஸ்கட் 3 அல்லது ரஸ்க் ரொட்டி.
காலை 8.30 மணிக்கு – கஞ்சி ஒரு கோப்பை அல்லது 2 இட்லி, அல்லது 2 சப்பாத்தி, பாலாடைக்கட்டி 1 துண்டு அல்லது ஒரு முட்டை மற்றும் ஒரு டம்ளர் பால்.
காலை 11 மணிக்கு     – முளைகட்டிய தானியம் 1 குவளை எவையேனும் ஒரு பழம்
மதியம் 1 மணிக்கு      - சப்பாத்தி-3, அல்லது 3 கரண்டி சாதம், பருப்பு 1 குவளை, பச்சைக் காய்கறி 1 குவளை, தயிறு 1 குவளை, சாலட்- சிறுதட்டு நிறைய
மாலை 4 மணிக்கு     – கொஞ்சம் உப்புமா, பால் -1 டம்ளர்
இரவு 8.30 மணிக்கு  - சப்பாத்தி – 3, அல்லது 3 கரண்டி சாதம், பருப்பு 1 கரண்டி, பச்சைக் காய்கறி 1 கரண்டி, தயிர் ஒரு குவளை, மீன் அல்லது கோழிக்கறி ஒரு குவளை, சாலட் ஒரு தட்டு.
இரவு 9.30 மணிக்கு  - பால் ஒரு டம்ளர்.
இவ்வாறான உணவுகளை கர்ப்ப காலத்தில் ஒரு பெண் எடுத்துக் கொண்டால் குழந்தை எவ்வித குறைபாடும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதுடன் தாயும் நலமாக இருப்பாள் என்பதில் ஐயமில்லை.