Monday, 10 November 2014

Household Tips!!!

வீட்டு குறிப்புகள்....?



* ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும்.

* பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது; மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.

* வெள்ளிப்பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்.

* மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.

* மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.

* பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.

* தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும். தொந்தரவில்லாமல் துடைக்கலாம்
   
   
துணியில் உள்ள வெற்றிலைக் கறையை போக்க எலுமிச்சம் பழத்தின் தோல் அல்லது புளித்த மோரை வெற்றிலைக் கறையின் மீது தடவினால் கறை மாயமாகி விடும்.

தோசைக் கல்லில் எண்ணெய் பிசுபிசுப்பு போக்க தோசைக்கல் அல்லது வாணலி மிதமான சூட்டில் இருக்கும் போது, அவற்றின் மேற்பரப்பில் சிறிது மோர் விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும்.

கறை இருந்த இடத்தில் ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் கழித்து சோப்பு நீரில் துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

சமைக்கும் போது ஒரு ஸ்பூன் சிட்ரிக் அமிலத்தை விட்டு, தண்ணீர் ஊற்றி குக்கரை உபயோகித்தால் கறுப்புக்கறை நீங்கி குக்கர் புதிது போல் ஆகி விடும்.

உரல், அம்மி, கிரைண்டர் போன்றவற்றை புதிதாக வாங்கியவுடன் தவிடு போட்டு அரைத்தால் அதில் உள்ள துளைகள் அடைபட்டு விடும். எனவே, தவிடுக்கு பதிலாக வெங்காயத்தைப் போட்டு அரைத்தால், சிறு சிறு மணல், கல் துகள் ஆகியவை வெங்காயத்துடன் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.

போரிங் பவுடரையும், கோதுமை மாவையும் சம அளவு எடுத்து நீரில் கரைத்து கொதிக்க விடுங்கள். அந்தக் கலவை பசை போல் மாறியதும் இறக்கி, ஆறிய பின்னர் அந்தப் பசையை சிறு சிறு உருண்டைகளாக்கி வெளியிலும் காய விடுங்கள். பின்னர் அந்த உருண்டைகளை சமையலறை அலமாரி மற்றும் கரப்பான் தொல்லை உள்ள இடங்களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

2 தே‌க்கர‌ண்டி த‌ண்‌ணீ‌ர், 1 தே‌க்கர‌ண்டி ‌வி‌னிக‌ர், 2 தே‌க்கர‌ண்டி சோ‌ப்பு‌க் கரைச‌ல் இதனை‌க் கல‌ந்து எறு‌ம்பு வர‌ககூடாத இட‌ங்க‌ளி‌ல் தெ‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள்.

மூ‌ன்று நா‌ட்க‌ள் தொட‌ர்‌ந்து அ‌ந்த எலு‌மி‌ச்ச‌ம் தோ‌ல் கு‌க்க‌ரி‌ல் அடி‌யி‌ல் ஊ‌றிய ‌பிறகு அதனை எடு‌த்து தே‌ய்‌த்தா‌ல்கு‌க்கரை‌ப் ‌பிடி‌த்‌திரு‌ந்த கரை த‌னியாக வ‌ந்து ‌விடு‌ம்.