Wednesday 5 November 2014

கிச்சடி!!!

ரைஸ் குக்கரினை வைத்து கிச்சடி செய்த இதே மாதிரி புலாவ் , பிரியாணி , உப்புமா என்று செய்யலாம்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 13 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  ரவை - 2 கப்
  .  கருவேப்பிலை - 10 இலை
  .  கொத்தமல்லி - சிறிதளவு கடைசியில் தூவ
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு
நறுக்கி கொள்ள :
  .  வெங்காயம் - 1 பெரியது
  .  தக்காளி - 2
  .  பச்சை மிளகாய் - 4  - 5
  .  பூண்டு - 10 பல் தோல் நீக்கியது
முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  பிரியாணி இலை - 2
  .  சோம்பு - 1/2 தே.கரண்டி
செய்முறை :
வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறீ வைக்கவும்,
ரைஸ் குக்கரில் Cook Modeயில் வைத்து அந்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வைக்கவும்.
.  பிறகு பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
.  பூண்டு வதங்கியதும் அத்துடன் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் +கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அத்துடன் தக்காளி + பச்சை மிளகாய் + மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அத்துடன் 4 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து ரைஸ் குக்கரினை மூடி வைத்து கொதிக்கவிடவும்.
.  சுமார் 3 - 4 நிமிடங்களில் தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும்.
தண்ணீர் கொதிக்கும் பொழுது ரவையினை கொட்டி கட்டி இல்லாமல் கிளறிவிடவும்.
.  ரவை நன்றாக கிளறிய பிறகு அதனை ரைஸ் குக்கர் மூடி போட்டு Keep Warm Modeயில் வைத்து 3 - 4 நிமிடங்கள் வைக்கவும்.
இப்பொழுது ரவை நன்றாக வெந்து இருக்கும். இத்துடன் கொத்தமல்லி இலையினை தூவி ஒரு முறை கிளறிவிடவும்.
சுவையான சூடான கிச்சடி ரெடி. இதனை தேங்காய சட்னி அல்லது சாம்பார் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.