Sunday, 2 November 2014

நரம்பு தளர்ச்சி!!!


ஹிந்தியில் சந்திரிகா அல்லது சோட்டாசந்த் என்று ஒரு மூலிகை சொல்வார்கள் அதற்கு நமது தமிழ் நாட்டில் சர்பகந்தி என்று பெயர் உண்டு. இந்த மருந்தை கனிஷ்கர் நமது நாட்டை ஆண்ட காலத்தில் அதாவது ஆயிரத்தி எண்ணூறு வருடத்திற்கு முன்பு ராஜ வைத்தியத்தில் சேர்த்துக்கொண்டதாக காரஹா என்ற வைத்தியநிபுணர் கூறுகிறார். அரசர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், இரத்த கொதிப்பு, நரம்பு தளர்ச்சி போன்றவைகளை இந்த மருந்து குணப்படுத்துமாம். சர்பகந்தி சமூலம் என்று தமிழ்நாட்டு மருந்து கடைகளிலும், வடநாடுகளில் சோட்டாசந்த் சமூலம் என்றும் மருந்து கடைகளில் இது கிடைக்கும். 

இந்த மருந்தை வாங்கி ஆறு மாதத்திற்கு தினசரி மூன்று வேளை உண்டு வரவேண்டும். கூடவே ரோஜா குல்கந்து சேர்த்து கொள்ளவும். நன்றாக காய்ச்சிய பசும்பாலில் குங்குமப்பூ போட்டு சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ச்சியாக ஆறுமாதம் சாப்பிட்டால் கண்டிப்பாக இந்த நோய் குணமாகி விடும். கூடவே "ஓம் கங் கணபதே நம" என்ற கணபதியின் மூல மந்திரத்தை காலை, மாலை இரண்டு வேளையிலும் இளம் வெயில் உடம்பில் படுமாறு உட்கார்ந்து நூற்றியெட்டு முறை ஜபம் செய்ய வேண்டும். மிக உறுதியாக கூறுகிறேன் நரம்பு தளர்ச்சி என்பது இருந்த இடம் தெரியாமல் பறந்து போகும்.