Saturday, 1 November 2014

சிரிப்பு கதைகள்!!!

பில் கேட்சுக்கு நாராயணசாமி எழுதிய கடிதம்
****************************************
புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய நாராயணசாமி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில்:
அன்பிற்குரிய பில் கேட்ஸ்,
சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.
1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.
2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.
3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.
4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.
5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?
6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.
7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.
8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.
9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?
இப்படிக்கு,
நாராயணசாமி
அமெரிக்க நகர் ஒன்றில், நம்ம நாராயணசாமி காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் .
நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. நாராயணசாமியும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் நாராயணசாமி காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ்காரார் நாராயணசாமியிடம்,
"குட் வ்னிங் சார்..’ என்றார்
"குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?" என்றார் நாராயணசாமி
அதற்கு போலிஸ்காரர்,
"நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்’. என்றார்
நாராயணசாமி சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார்,
"இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்’ என்று சொன்னார்.
போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே நாராயணசாமியின் மனைவி,
"சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்’ என்றார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாராயணசாமியின் காது கேட்காத அம்மா சொன்னார்,
"நான் அப்பவே சொன்னேன் கேட்டியா....திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்."