Saturday 1 November 2014

மேகத்தில் உங்கள் கோப்பு.!!!

மேகத்தில் உங்கள் கோப்பு.


மேகத்தில் உங்கள் கோப்பை சேமியுங்கள்.



நீங்கள் முக்கியமான கோப்புகளை பென் டிரைவ் அல்லது சீடி மூலம் பாதுகாத்து பல இடங்களுக்கு எடுத்துச்செல்லவேண்டியிருக்கும். சில நேரங்களில் பென் டிரைவ் தொலைந்து விட்டால் நாம் சென்ற இடத்தில் அந்த கோப்பை பயன்படுத்த முடியாத நிலையில் ஆகிவிடுவோம். இது போன்ற நிலைகளில் நமக்கு கைகொடுப்பது Google Drive என்ற  கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை. இன்டர்நெட் வழியாகத் தரப்படும் எந்த சேவையையும் கிளவுட் கம்ப்யூட்டிங் என அழைக்கலாம். அனைத்து சேவைகளும் இன்டர்நெட் வழியே மேற் கொள்ளப்படுவதால்இணைய  வெளியில் மேகமேபிரதானமாக உள்ளதால் இது கிளவ்ட் கம்ப்யூட்டிங் எனப் பெயர் பெற்றது.
5GB அளவில் Google Drive எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

இந்த Google Drive  நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் உருவாக்கி சேமிக்கும்மைக்ரோசாப்ட் ஆபீஸ் பைல்கள் அல்லது இணையத்தில் இருந்து டவுண்லோடு செய்துசேமிக்கும் Audio, Video ஸ்கேன் செய்யப்பட்ட கோப்பு  போன்ற பைல்களை  சேமிப்பதுஎப்படி  என்று பார்ப்போம்.

முதலில் நீங்கள் இந்த Google Drive   drive.google.com/ என்ற இணைய தளத்தில்இருந்து டவுண்லோடு செய்யுங்கள்.



பிறகு இதனை நீங்கள் உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

இதனை இன்ஸ்டால் செய்யும்பொழுது இந்த Google Drive மூலம்  நீங்கள் புதிதாக ஒருகணக்கை உருவாக்க வேண்டி இருக்கும் ஏற்கனவே ஜீமெயில் வைத்திருப்பவர்கள் அந்த கணக்கையே பயன்படுத்தலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் இந்த Google Drive  இன்ஸ்டால் ஆகி முடிந்ததும்  ஒரு போல்டர்ஓப்பன் ஆகும்இதுதான் உங்கள்  பைல்களை சேமிக்கும் போல்டர்இதில் Google Driveமூலம் தானாக சேமிக்கப்பட்ட போல்டர் வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

இந்த போல்டரில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்ரில் வேறு இடத்தில் உள்ள ஒருபோட்டோவையோ அல்லது பைலையோ காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்கிறீர்கள்என வைத்துக்கொள்வோம்அதுவும் முன்பு சொன்னமுறைப்படி இண்டெர் நெட் மூலம்அப்டேட் ஆக ஆரம்பிக்கும். ( இங்கு காண்பதுபோல்)


கோப்பின் கீழே உள்ள அந்த சக்கரம்போல் உள்ள ஐக்கான் இங்கு காண்பதுபோல் டிக்செய்ததுபோல் மாறிவிட்டது என்றால் பைல்கள் சரியாக டவுண்லோடு ஆகிவிட்டதுஎன்று அர்த்தம்.

இந்த முறைப்படி நீங்கள் உங்கள் பைல்களை (Audio, Video, Photo,  ஸ்கேன் செய்யப்பட்ட கல்வி சான்றிதழ்கள், ரேஷன் கார்ட், பான் கார்ட், போன்றவற்றை5 GB அளவில்இந்த Google Drive அக்கவுண்ட் மூலமாக சேமித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு சேமிக்கும் கோப்புகள்

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது

 
        நீங்கள் வேறு இடத்திலோ அல்லது வேறு கம்ப்யூட்டரையோ பயன்படுத்தும்போது Google Drive   இன்ஸ்டால் செய்ய தேவையில்லை. நீங்கள் நேரடியாக http://docs.google.com என்ற முகவரியில் Google Docs ல் உங்கள்  user Id மற்றும்   Password கொடுத்து நேரடியாக மேகத்திலிருந்து உங்களுடைய கோப்புகளை டவுண்லோட் செய்துகொள்ளலாம்.