இல்லத்து நிவாரணிகள்!!
நம் சமையலறையில் இருக்கும் பொருள்களைக்கொண்டும் வெளியில் கிடைக்கும் சில எளிமையானப் பொருள்களைக்கொண்டும் அன்றாடம் நமக்கு ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளைத் தீர்க்க முடிகிறது. சின்னச் சின்ன சங்கடங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. அந்த மாதிரியான சிறு சிறு வீட்டுக்குறிப்புக்கள் இதோ!
1..பலகாரம் செய்யும்போது எண்ணெய் வைக்கும் வேளையில் இஞ்சி சிறிது, சிறிது வாழைப்பட்டைத்துண்டு இவற்றை நசுக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்துப்போட்டு பிறகு பலகாரம் செய்தால் அதிக எண்ணெய் குடிக்காது. பலகாரத்திலும் எண்ணெய் வாசம் வராது.
2. வாழைத்தண்டின் மேல் பட்டையை நீக்கி தண்ணீர் நிறைந்த மெல்லிய பிளாஸ்டிக் பை ஒன்றில் முக்கி முடிச்சிட்டு வைத்தால் 15 நாட்களானாலும் கெடாது.
3. சீதாப்பழ விதைகளை வெய்யிலில் காய வைத்து அரிசி, பருப்பு டப்பாக்களில் போட்டால் பூச்சி, புழுக்கள் அண்டாது.
4. மல்லியை முளைக்க வைக்க, ஒரு சமமான பலகையால் இலேசாக அழுத்தி எடுத்தால் போதும். முழுதாய்ப் போட்டால் முளைக்காது.
5. அவசரமாக இட்லி மாவு புளிக்க மாவை ஹாட்பாக்ஸில் ஊற்றி வைக்கவும்.
6. மோர் புளிக்காதிருக்க சிறிது வெண்ணெய் உருட்டி அதில் போட்டு வைத்தால் மோர் புளிக்காது.
7. உபயோகித்த முட்டை ஒட்டை ஆங்காங்கே போட்டு வைத்தால் பல்லி வீட்டை விட்டு ஓடி விடும்.
8..மழைக்காலங்களில் தீப்பெட்டிகளில் ஏழெட்டு அரிசி மணிகளைப்போட்டு வைத்தால் தீக்குச்சிகள் நமுத்துப்போகாது.
9. ஒரு கைப்பிடி பொரியை பொடித்து சேர்த்தால் ரவா உப்பும மிகவும் சுவையாக இருக்கும்.