பார்கோட் வடிவில் நதிக்கரை
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள் என்று பலவற்றிலும் இக்கோடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
கீழே எண்களுடன், தடிமனான கோடு, மெல்லிய கோடு என்று பலவிதமான வடிவங்களில் செங்குத்து வரிசையில் கோடுகள் சிறு இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்கும். இக் கோடுகளின் தொகுப்பையே பார்கோட்(Barcode) என்கின்றனர். இது ஒரு சர்வதேச குறியீட்டு முறையாகும்.
இம்முறை முதன்முதலில் ரயில் போக்குவரத்திற்காக 1949களில் அமெரிக்காவைச் சேர்ந்த பெர்னார்ட் சில்வர் மற்றும் ஜோசப் உட்லேண்ட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அதில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இன்றுள்ள பார்கோட் முறை உருவாக்கப்பட்டது.
PDF417 வடிவில் நதிக்கரை
இக்குறியீட்டைப் படிக்க பார்கோட்ஸ்கேனர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. பார்கோடுகளின் மீது லேசர் ஒளிக் கற்றையை செலுத்திய விநாடி யில் அப்பொருள் குறித்த விபரம் கணினியில் காட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கும்.
பார்கோட்களின் கீழாக கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் நான்கு பிரிவு
களாக பிரிக்கப்பட்டிருக்கும். இதில் முதல் பிரிவு விற்கப்படும் பொருளின் வகையைக் குறிப்பதாகவும், இரண்டா வது பிரிவு தயாரிப்பாளரைக் குறிப்பதா கவும், மூன்றாவது பிரிவு பொருளின் தனித்த விபரத்தைக் குறிப்பதாகவும், நான்காவது பிரிவு மேற்கண்ட மூன்று பிரிவு விபரங்களும் சரிதானா என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.
பல வகையான பார்கோட் முறைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. பார்கோட்கள் பொதுவாக வர்த்தகப் பயன்பாட்டிற்கே அதிகம் பயன்படுத்துவதாகத் தோன்றினாலும், வேறு பல வகையிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன.
பார்கோட் முறையில் சாதாரண நேரோட்ட பார்கோட் மற்றும் 2டி பார்கோட் என இருவகை உண்டு.
வர்த்தகப் பயன்பாட்டில் உள்ள பார்கோட்கள் பொதுவாக யூ.பி.சி. என்ற வகை சார்ந்ததாக இருக்கும். மருத்துவமனைகளில் நோயாளிகள் குறித்த விபரம், நோய் மற்றும் சிகிச்சை தகவல்களைப் பதிந்து வைக்கவும், வங்கிகள், நூலகங்கள் ஆகிய இடங்களில் கோட்பார் என்ற பழைய பார்கோட் குறியீட்டு முறை சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
பார்கோடில் இன்டர் லீவ்ட் 2 என்ற ஒரு வகை உண்டு. இது நூலகங்கள், மொத்த விற்பனை நிலையங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
நான் இன்டர்லீவ்ட் 2 எனப்படும் மற்றொரு முறையை தொழில் துறையில் பின்பற்றுகின்றனர். இவை யனைத்தும் நேரோட்ட பார்கோடு வகை சார்ந்தவை.
QR Code வடிவில் நதிக்கரை
க்யூ.ஆர்.கோடில் பெயர், முகவரி, தொலைபேசி எண், வசிக்கும் பகுதிக்கான பாகை அளவு எனப் பல விபரங்களைப் பதிந்திட முடியும். க்யூ.ஆர்.கோடில் அமைக்கப்பட்ட தகவலை அறிய மற்ற பார்கோடுகளுக்கு உள்ளதுபோல தனியாக ஸ்கேனர் கருவிகள் தேவையில்லை. நாம் பயன்படுத்தும் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களே போதும். பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களுக்கான க்யூ.ஆர். கோடு ரீடர் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
யூ.பி.சி., க்யூ.ஆர். உள்ளிட்ட பார் கோடுகளை எளிதாக உருவாக்க இலவச இணையதளங்களும் உள்ளன.
பார்கோடு, கியூ.ஆர்.கோட் உருவாக்க
http://www.barcode-generator.org/
http://www.barcoding.com/upc/
http://zxing.appspot.com/generator/
http://barcode.tec-it.com/
http://www.racoindustries.com/barcodegenerator/2d/qr-code.aspx
பார்கோடு, கியூ.ஆர்.கோட் தகவல்களைப் படிக்கும் இணையதளங்கள்
http://www.onlinebarcodereader.com/
http://zxing.org/w/decode.jspx
மேற்கண்டவை அல்லாமல் மேலும் பல வகை பார்கோடு குறியீட்டு முறைகளும் பயன்பாட்டில் உள்ளன.
பார்கோடுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள
en.wikipedia.org/wiki/Barcodeen.wikipedia.org/wiki/QR_code
www.barcodesinc.com
en.wikipedia.org/wiki/Barcode_reader