Tuesday, 18 November 2014

நாங்களும் உங்களை கண்காணிக்கிறோம்!!!

நாங்களும் உங்களை கண்காணிக்கிறோம்!

இன்று கேமரா என்றதும் நம் நினைவிற்கு வருவது கைத்தொலைபேசிதான். ஆனால் நாம் கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளாத, நாம் தினமும் பயன்படுத்தி வருகின்ற பொருட்களான பேனா, சாவிகொத்து, மூக்கு கண்ணாடி, கைக்கடிகாரம், சட்டை புத்தான், சுவரில் இருக்கும் ஆணி, மின்சார பிளக், chewing gum என எதிலெல்லாமோ இன்று கேமரா வந்துவிட்டது. இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்றாலும் கூட இதனால் நிறைய பாதிப்புகளும் உண்டு. எதுக்கும் கள்ளக்காதல், லஞ்சம், ஊழல்பேர்வளிகள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. ஆக நம்மை யார், எங்கு கண்காணிக்கிறார்கள் அல்லது படம் பிடிக்கிறார்கள், என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியாதபடி நிலைமையுள்ளது.

கீழே உள்ள படங்களை பாருங்கள். சாதாரணமாக அணியும் கைக்கடிகாரத்தில் சக்தியுள்ள காமெரா உள்ளது.





அடுத்ததாக பேனா, நாம் தினமும் பயன்படுத்தக்கூடியது. இந்த வகை கேமரா கையில் இருந்தால் யாராவது சந்தேகப்படுவார்களா?



அடுத்தது நாம் அணியும் கண்ணாடி. இதை பார்த்தால் பாஷன் கண்ணாடி போல தோன்றும். ஆனால் அதனுள் இருப்பது சக்தி வாய்ந்த கேமரா.






கீழேயுள்ளது பார்ப்பதற்கு கார் சாவிகொத்து போல தெரியும். அதனுள்ளும் அதி நவீன கேமரா இருக்கிறது. காரில் பயணம் செயும்போதும்கூட கவனம் தேவை.

இந்த கேமரா திருகு ஆணியின் தோற்றம் உடையது. எதோ ஆணி என நினைப்போம். ஆனால் இதுவும் நம்மை படம் பிடித்துக்கொண்டு இருக்கும்.


இதைப்பாருங்கள் வாயில் இட்டு சுவைக்ககூடிய சமாச்சாரம். அதன் வடிவில்கூட கேமரா.

இது நம் சட்டையின் புத்தானை போலவே இருக்கும். சட்டைபையில் போட்டிருக்கும் கருவிக்கும் இதற்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். இதுவும் ஒரு சக்தி வாய்ந்த கமெராதான்.

இதைப்பாருங்கள் சாதாரண மின்சார பிளக் போலவே இருக்கும். அதனுள்ளும் கேமரா.



இப்படி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காமெராக்களை கண்டு பிடிக்கும் கருவியும் உள்ளது. ஆனால், அதன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு செயல்படும் காமெராக்கள் நிறைய உண்டு. நாம் இனி எங்கேயும் ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை!

எனவே கள்ளகாதல் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், ஊழல் பேர்வழிகள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். , இது காலத்தின் கட்டாயம்.

லண்டனில் போலீஸ்காரர்கள் மற்றும் கார் பார்க் செய்வதை கண்காணிப்பவர்கள், தங்கள் தொப்பியில் நவீன சிறிய காமெராவை பொருத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட தக்கது