Friday, 7 November 2014

ஆன்லைனில் இலவச திரைப்படம்!!!

பேஸ்புக், கூகிள் ப்ளஸ் போன்றதொரு சமூக இணையதளம் வர்ல்டுப்ளோட். 

இத்தளம் தனது பயனர்களுக்காக இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்ப்பதற்கான வசதியை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதுபற்றி இந்நிறுவனத்தின் தலைவர் புஸ்கர் மகட்டா கூறியதாவது; 

ஆன்லைனில் நாங்கள் இலவச திரைப்பட சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் தளத்தின்  மூலம் காணக்கிடைக்கும் திரைப்படங்கள் தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அமைந்திருக்கும். விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் திரைப்படங்களை காண்பதற்கான வழிவகைகள் செய்ய உள்ளோம்" 

social-network-for-watching-all-world-movies


18000 க்கும் மேற்பட்ட ஆங்கிலப்படங்கள், 7000த்திற்கும் மேற்பட்ட இந்தியப்படங்கள் என வேர்ல்டுப்ளோட் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

உலகளவில் மற்ற தேசிய மொழிகளிலும், குறிப்பாக எதிர்வரும் காலங்களில் பிரஞ்சு, இத்தாலி போன்ற வெளிநாட்டு  மொழிகளில் அமைந்த படங்களையும், இந்தியர்களுக்கான மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி போன்ற மொழிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களை இலவசமாக காண முடியும் என்றும் அந்நிறுவனத் தலைவர் கூறியுள்ளார். 

அக்காலப் படங்கள் முதல், இக்காலத்தில் சமீபத்தில் வெளியிட்ட திரைப்படங்கள் வரை இந்த தளத்தில் காண முடியும் என்பது சிறப்பு. 

அதைப்பற்றி அந்நிறுவனத்தலைவர் கூறும்பொழுது, 1890 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் படங்கள் முதல், 2013 தற்காலத்தில் உருவாக்கப்பட்ட வண்ணத் திரைப்படங்கள் வரை அனைத்து திரைப்படங்களையும் வேர்ல்ட் ப்ளோட் தளத்தின் மூலம் இலவசமாக அனைவருமே பார்க்க முடியும் என்றார். 

இந்த இலவசமாக சேவையை லேப்டாப், ஐபேட், ஆண்ட்ராய்ட் போன்கள், டேப்ளட் போன்றவைகளிலும் கண்டுகளிக்கும் வகையில் தளத்தின் இன்டர்பேஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாமர மக்களும் பார்க்கும் வண்ணம் வீட்டில் இருக்கும் வண்ணத் தொலைக்காட்சிகளிலும் இத்தளத்தின் படங்களை பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். 

இத்தளத்தில் இணைந்து, இதில் உள்ள பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தலாம். 



தளத்திற்கான முகவரி:http://worldfloat.com/