Wednesday 5 November 2014

வெங்காய சட்னி!!!

                                                 

தேவையான பொருட்கள் :
·         வெங்காயம் – 2
·         காய்ந்த மிளகாய் – 4
·         புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
·         உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         உப்பு தேவையான அளவு
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு தாளிக்க
·         உளுத்தம்பருப்பு – 1/2 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 4 இலை
·         பெருங்காயம் தூள் சிறிதளவு
செய்முறை :
·         வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு + காய்ந்தமிளகாய் ஒவ்வொன்றாக வறுத்துகொள்ளவும்.
·         வெங்காயத்தினை வதக்கி சிறிது நேரம் ஆறவைக்கவும்.
·         மிக்ஸியில் முதலில் உளுத்தம்பருப்பு + காய்ந்தமிளகாய் + புளி சேர்த்து மைய அரைக்கவும்கடைசியில்  வெங்காயம் + உப்பு சேர்த்து கொரகொரவேன அரைக்கவும்.
·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான வெங்காய சட்னி ரெடி.

குறிப்பு :
முதலில் உளுத்தம் பருப்பினை அரைத்து கொள்ள வேண்டும். அப்பதான் சட்னி நல்லா இருக்கும்.
இந்த சட்னியில் புளிஅதிகம் சேர்க்க வேண்டும். புளியினை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்தால் சீக்கிரமாக அரைப்படும்