Tuesday, 18 November 2014

Cooking!!!

பேசின் கி கிரேவி சப்ஜி - பீஹார் ஸ்பெஷல்

  
இது பீஹார் பக்கம் ஒரு பாபுலர் சைடு டிஷ். நாம் இதை செய்து பார்க்கலாமா?
ரொட்டி சப்பாத்தி இவற்றுக்கு தொட்டுக்கொள்ள  இதை செய்யலாம்.

கடலை மாவு இரண்டு கப், தனியா பொடி ஒரு டீ  ஸ்பூன், மிளகாய் பொடி ஒரு   டீ ஸ்பூன், உப்பு, மஞ்சள்பொடி ,ஒரு வெங்காயம், தக்காளி பழம் ஒன்று, எண்ணெய் ஒரு டீ ஸ்பூன். 
கடலை மாவுடன் தனியா பொடி, மிளகாய் பொடி, உப்பு ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக பிசையவும். சப்பாத்தி மாவு போல் இது  இருக்க வேண்டும். இந்த மாவை நீளமாக , கயிறு போல்  உருட்டவும். ஒரு குக்கரில் தண்ணீர் வைத்து தட்டில் இந்த மாவு கயிற்றை ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். இந்த மாவு கயிற்றை வெளியே எடுத்து ஒரு கத்தியால் வட்டம் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் சீரகம் ஒரு ஸ்பூன் ,   வெங்காயம், தக்காளி இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் போட்டு கிளறவும். இத்துடன் அரை டீ ஸ்பூன் மஞ்சள் தூள் , ஒன்றரை டீ ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்  பச்சை வாசனை போனதும் ஒரு டம்ப்ளர் தண்ணீரை ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள மாவு துண்டங்களை போடவும். சற்று உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இறக்கி வைத்து கொத்த மல்லி  கிள்ளிப்போடவும். 

சுவையான பேசன் கி சப்ஜி ரெடி  - 

சொம்பு கொழுக்கட்டை தமிழ் ரெசிபி

ஒரு மாறுதலுக்கு இப்போ ஒரு தமிழ்நாட்டு டிபன் பார்ப்போமா? 


.   நிச்சயம்  புதுமையானது நீங்களும் தான் செய்து பாருங்களேன் 

ஒரு டம்பளர் பச்சரிசி அரை டம்பளர் புழுங்கரிசி ஒரு டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு நிறைய பச்ச மிளகாய்  நிறைய மிளகாய் வற்றல் , உப்பு , கடுகு ஒருஸ்பூன் எண்ணெய் (தாளிக்க), ஒரு மூடி தேங்காய் (துருவியது) 



அரிசி பருப்பு மிளகாய்  இவற்றை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு உப்பு பெருங்காயம் , தேங்காய் (துருவியது) சேர்த்து ,கிரைண்டரில் தண்ணீர் ஊற்றி அரைக்கவும் - மிகவும் நைசாகவும் இருக்க கூடாது - மிகவும் பெரிசாகவும் இருக்க கூடாது - அடைக்கும் தோசைக்கும் இடைப்பட்ட பதத்தில் கெட்டியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் 


ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் - குக்கர் பாத்திரமாக இருக்கலாம்.


தண்ணீர் கொதிக்கும் போது அரைத்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி தண்ணீரில் போடவும் அவை நன்றாக வெந்ததும் தண்ணீரில் மிதந்து வரும் இவற்றை தனியே எடுத்து வைத்து கொள்ளவும் - தண்ணீர் போதாவிட்டால் இன்னும் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும் ஒரு டம்பளர் மாவை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்


இலுப்பசட்டியில் சிறிது எண்ணை வைத்து சுட்டதும் சிறிது கடுகை வெடிக்கவிட்டு தண்ணீரை ஊற்றி கொதிவந்ததும் வேகவைத்த உருண்டைகளையும் எடுத்து வைத்த மாவையும் போட்டு, சிறிது உப்பு போட்டு மூடிவிடவும் நன்றாக வெந்ததும் இறக்கி வைத்து விடவும் நன்றாக ஆறியவுடன் சாப்பிட்டால் சொர்கம்தான் 












சுரிதார் தெரியும் தரிதார் தெரியுமா?


இது ஒரு உருளை கிழங்கு கூட்டு பஞ்சாப் பக்கம் ரொம்ப பேமசானது நாமும் செய்து பாக்கலாமா?
உருளை கிழங்கை தோல் உரித்து , நறுக்கி வைத்துக்கொள்ளவும்
வெங்காயம், தக்காளி, தனியா, மஞ்சள்பொடி, சாதா மிளகாய் பொடி, உப்பு இவற்றை mixi யில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும் குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சீரகத்தை பொரித்துக்கொள்ளவும் ,பிறகு அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்றாக வதக்கவும் . பச்சை வாசனை போன பிறகு நறுக்கிய கிழங்கை அதில் போட்டு தண்ணீர் சேர்க்கவும் (இது கொஞ்சம் நீர்க்க இருந்தால் நன்றாக இருக்கும்)
குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்
பிறகு இறக்கி பரிமாறவும்
சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் ......பலே பலே ....

மோ மோ செய்து பாருங்க

ஸாரி இவர் மா மா இல்லீங்க மோ மோ.
இது நார்த் ஈஸ்ட்ல பண்ணற டிபன்க
இது நம்ம ஊர் கொழுக்கட்டை மாதிரி சமாசரங்க
சரி இதை செய்வது எப்புடி?

ஒரு கப் பச்சரிசிய இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து grinder ல் தோசை மாவு போல் அரைத்து கொள்ளவும் அடுப்பை பற்றவைத்து கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய்
விட்டு அரைத்த மாவில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கடாயில் நன்றாக கிளறி , மாவு ஒரு பந்து போல வந்ததும் அடுப்பை அணைக்கவும்
மாவை ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.

காரெட் , பச்சை பட்டாணி, குடை மிளகாய் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி கரம் மசாலா சேர்த்து , தேவையான அளவு அளவு உப்பும் சேர்த்து வதக்கவும் , இப்பொழுது அடுப்பு சிம் ல் இருக்க வேண்டும்.
வேக வைத்த மாவை சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். பிறகு உருண்டைகளை
தட்டையாக செய்து கொள்ளவும் (கொழுகட்டைக்கு செய்வது போல்) இதற்குள் வதக்கி வைத்த காய் கறியை வைத்து மூடி . உருண்டையாக செய்து கொள்ளவும். இவற்றை குக்கரில்v ஏழு அல்லது எட்டு நிமிடம் வேக வைத்து இறக்கினால் மோ மோ தயார் .

இதை தொட்டுக்கொள்ள கொத்துமல்லி கார சட்னி அல்லது சாசுடனும் சாப்பிடலாம்.