Saturday, 1 November 2014

வீடியோ கட்டர்!!!

வீடியோ கட்டர்


VLC PLAYER -ல் வீடியோ கட்டர்
 
நாம் சிலநேரங்களில் வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட் செய்து பயன்படுத்த விரும்புவோம். அந்த நேரங்களில் வீடியோ கட்டர் மென்பொருளை தேடிகொண்டிருப்போம். நாம் வழக்கமாக பயன்படுத்தும் VLC PLAYER ல் அந்த OPTION இருப்பது சில பேருக்கு தெரியாது.
VLC PLAYER ல் வீடியோ கட்டரை பயன் படுத்த கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
முதலில் நாம் VLC PLAYER ல் ஒரு மாற்றத்தை செய்யவேண்டும்.
VLC PLAYER ஐ திறந்து அதில் View  என்பதை கிளிக் செய்து Advanced Controls
என்பதை தேர்ந்தெடுத்து மாற்றத்தை ஏற்படுத்தவும்.
  

இப்பொழுது VLC PLAYER ல் வீடியோகட்டர் ரெடி.
வீடியோ கட் செய்யும் முறை.
முதலில் கட் செய்யவேண்டிய வீடியோவை VLC PLAYER மூலம் OPEN செய்யவும். வீடியோ PLAY ஆகும் பொழுது கட் செய்யவேண்டிய இடம் ஆரம்பிக்கும் பொழுது RECORD பட்டனை அழுத்தவும். 

நாம் முடிக்கவேண்டிய இடத்திலும் அதே RECORD பட்டனை அழுத்தவும் இப்பொழுது கட் செய்யப்பட்ட பகுதி உங்களுடைய DOCUMENTS LIBRARY ல் விழ்ந்திருப்பதை பார்க்கலாம்.
பயன்படுத்தி மகிழுங்கள்.