Thursday 6 November 2014

ஷட்டவுன் கொடுத்தவுடனே கம்ப்யூட்டர் ஆப்!!!

ஷட்டவுன் கொடுத்தவுடனே கம்ப்யூட்டர் ஆப் ஆகிவிடவேண்டும் என்றுதான்எல்லோரும் நினைப்பார்கள்.. 

சில சமயங்களில் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்யும்போது அது எடுத்துக்கொள்ளும் நேரம் நம்மை எரிச்சலை ஏற்படும். 

நாள் முழுவதும் கணினியைப் பயன்படுத்திவிட்டு, அதை ஷட்டவுன் செய்தால் கணினி ஆப் ஆக சிறது நேரம் எடுத்துக்கொள்ளும். 

அது அணையும் வரைக்கும் பொறுமையாக காத்திருக்க முடியாது. 

how-to-shutdown-computer-with-in-a-second

பொதுவாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் ஷட்டவுன் ஆவதற்கு முன்பு Windows is shutting down என்ற வாக்கியம் தோன்றும். பிண்ணனியில் பிராசஸ் நடைபெறுவதற்கான வட்டம் சுழன்றுகொண்டே இருக்கும். 

இதுதான் பொறுமையை சோதிக்கும் விடயம். ஷட்டவுன் கொடுத்த உடனேயே கம்ப்யூட்டர் ஆப் ஆகாதா? ச்சே..ச்சே...

என்று தொடர்ந்து மனம் எரிச்சலடையும்..என்றால், கண்டிப்பா அதுபோல ஆப் செய்ய முடியும். பவர் பட்டனை அணைக்காமலேயே முறையாக ஷட்டவுன் செய்து உடனடியாக கம்ப்யூட்டரை நிறுத்த முடியும். 

அதற்கு,

  • முதலில் டாஸ்க் மேனேஜரைத் திறக்க வேண்டும். 
  • டாஸ்க் மேனேஜரை திறக்க குறுக்குவிசைகள் (Ctrl+Alt+Delete)
  • மேற்கண்ட விசைகளை ஒருசேர அழுத்தும்போது டாஸ்க் மேனேஜர் திறந்துவிடும். 
  • அதில் Shut Down மெனு இருக்கும். 
  • அதில் Turn off என்றிருப்பதை Ctrl பட்டனை அழுத்திக்கொண்டே அழுத்தினால் உடனடியாக உங்கள் கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகிவிடும். 

சோதித்துப் பாருங்களேன்..!