-Simple Home Budget - வீட்டு வரவு செலவை கணக்கிட
ஆற்றில் போட்டாலும் அளந்துபோடவேண்டும் என்று சொல்லுவார்கள்.நாம் ஆத்தில்(வீட்டில்)செய்யும் செலவினை சுலபமாக கணக்கிடலாம்..இந்த தளம் செல்ல http://www.home-budget-software.com"target="_blank"/ என்கின்ற முகவரியை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Free Download கிளிக் செய்து வரும் சாப்ட்வேரினை
(3 எம்.பி.கொள்ளளவு) டவுண்லோடு செய்து பின்னர் இன்ஸ்டால் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
(3 எம்.பி.கொள்ளளவு) டவுண்லோடு செய்து பின்னர் இன்ஸ்டால் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உங்களுக்கு இடது புறம் கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Expense,Income,Refund என மூன்று ரேடியோ பட்டன்கள் இருக்கும். நீங்கள் எந்த வகையான தகவல்களை உள்ளீடு செய்யப்போகின்றீர்களோ அந்த விவரம் தட்டச்சு செய்யவும்.
இதில் உள்ள Category யில் நமக்கு தேவையான கூடுதல் விவரங்களையும் இணைக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

என்பதன் மூலம் நாம் விவரங்களை சேமித்துக்கொள்ளலாம். இதில் கூடுதல் வசதி என்னவென்றால்இந்த சாப்ட்வேர் தமிழை ஆதரிப்பதால் இதில் நாம் தமிழிலேயே விவரங்களை தட்டச்சு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Overview கிளிக் செய்வதன் மூலம் நம்முடைய வரவு -செலவினை கிராப் மூலம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
