Friday, 3 October 2014

நீரிழிவு டிபன் வகைகள்!!!

நீரிழிவு டிபன் வகைகள்

பாசிப்பருப்பு இட்லிதேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – 1கப் தலைதட்டி
இட்லி அரிசி – 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 டேபிள் ஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
பாசிப்பருப்பு, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஊற வைக்கவும். ஊறியதும் மிளகாய், தனியா, சீரகம், சிறிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். பின்னர் இட்லி தட்டிலி இட்லீகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து மிளகாய் சட்னியுடன் பரிமாறவும்.
கோதுமை ரவை இட்லிதேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1 கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
புளித்த தயிர் – 1 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிது
மிளகு – 1/4 டீஸ்பூன்
செய்முறை
பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை ரவையையும், கடலைப்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியவுடன் இதனை மிக்ஸியில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர் எண்ணெய் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
ராகி இட்லிதேவையான பொருட்கள்
ராகி (கேழ்வரகு) – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
கேரட் துருவியது – 2 டேபிள் ஸ்பூன்
முட்டைக்கோஸ் துருவியது – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி,கறிவேப்பிலை- சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
சீரகம் – சிறிது
செய்முறை
உளுத்தம்பருப்பையும், கேழ்வரகையும் தனித்தனியாக ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்தவுடன் மாவில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய கேரட், முட்டைக்கோஸ் மற்றும் சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இட்லித் தட்டுகளில் இட்லியாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். மிளகாய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
ஜோவார் இட்லிதேவையான அளவு
வெள்ளைச்சோளம் – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
காய்கறித்துருவல் – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
வெள்ளைச்சோளத்தையும், உளுந்தையும் 4 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து உப்பு சேர்த்து கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். காலையில் காய்கறித்துருவல்களை இந்த மாவுடன் சேர்த்து கலந்து இட்லித்தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து சூடாகப் பரிமாறவும்.
கோதுமை ரவை பொங்கல்தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி விழுது – 1/4 டீஸ்பூன்
முந்திரி – 2
சன் ப்ளவர் ஆயில் – 3 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை
ஒரு குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கோதுமை ரவையை போட்டு லேசாக வறுக்கவும். பின் பாசிப்பருப்பையும் போட்டு லேசாக வறுக்கவும். பின்னர் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து, இஞ்சி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து நன்கு கிளறவும். ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்து, பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
கோதுமை ரவை கிச்சடிதேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1 டம்ளர்
கேரட் – பாதி
பீன்ஸ் – 10
தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
மஞ்சள்பொடி – சிறிது
இஞ்சி – சிறிது
பூண்டு – 2 பல்
சோம்பு – 1 டீஸ்பூன்
புதினா – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
கேரட், பீன்ஸ், தக்காளி, பெரிய வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி , சோம்பு போட்டு தாளித்து, இஞ்சி பூண்டை நசுக்கிப் போட்டு நறுக்கிய பச்சைமிளகாய், காய்கறிகளை போட்டு வதக்கவும். பின் கோதுமை ரவையையும் சேர்த்து வதக்கி புதினா, மஞ்சள் பொடி, உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 சத்தம் வரும் வரை வதக்கவும். வெந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சேமியா மசாலா பொங்கல்தேவையான பொருட்கள்
சேமியா – 2 கப்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 10 பல்
இஞ்சி – 1 இன்ச்
வெந்தயக்கீரை – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
தண்ணீர் – 4 கப்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க
மிளகாய் – 4
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
பட்டை – சிறிது
ஏலக்காய் – 2
கிராம்பு – 1
செய்முறை
பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியை போட்டு வதக்கி பின் வெந்தயக்கீரையை போட்டு லேசாக வதக்கி வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீரையும் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். (வறுத்த சேமியா என்றால் வறுக்க வேண்டாம். இல்லையென்றால் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவும்.) கடைசியாக சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாகக் கிளறவும். அரைத்து வைத்துள்ள மசாலாப்பொடியையும் சேர்த்து ஒரு மூடி போட்டு மூடி வேக விடவும். வெந்ததும் திறந்து கொத்தமல்லி தூவி பொட்டுக்கடலை சட்னியுடன் பரிமாறவும்.
ராகி இடியாப்பம்தேவையான பொருட்கள்
ராகி இடியாப்பம் – 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கொழுப்பு நீக்கப்பட்ட மோர் – 1 கப்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். ராகி இடியாப்பத்தை சிறிது தண்ணீரில் ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் மோரை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். சிறிது கொதி வந்தவுடன் ராகி இடியாப்பத்தை போட்டுக்கிளறி இறக்கிப் பரிமாறவும்.
ராகி புட்டுதேவையான பொருட்கள்
ராகி மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
உப்பு – தேவைக்கேற்ப
தண்ணீர் – 1 கப்
செய்முறை
அரிசி மாவு, ராகி மாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசறிக் கொள்ளவும். பின் புட்டுக் குழாயில் புட்டு மாவு, பின்னர் தேங்காய் என்று ஒன்று மாற்றி ஒன்று வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கொண்டைக் கடலை குழம்புடன் சூடாகப் பரிமாறவும்.
கோதுமை புட்டுதேவையான பொருட்கள்
பஞ்சாப் கோதுமை – 1/4 கிலோ
தேங்காய் – தேவையான அளவு
பாசிப்பருப்பு – 1/4 கப்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் – 1
வெங்காயம் – 1
கடுகு – சிறிது
உளுத்தம்பருப்பு – சிறிது
செய்முறை
கோதுமையை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து, அடுப்பில் வெறும் சட்டியில் வறுத்துக் கொள்ளவும். அது பொரிந்து நல்ல வாசனை வரும் போது இறக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் சிறிது நீர் தெளித்து பிசறி சட்டையில் கட்டிகள் இல்லாமல் சலித்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை அரை பதமாக வேக வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி வேக வைத்த பருப்பு மற்றும் கோதுமை புட்டை கொட்டி தேவையான அளவு உப்பு போட்டு கிளறி, கடைசியாக தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.
நீரிழிவு டிபன் வகைகள்

பாசிப்பருப்பு இட்லி
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு        – 1கப் தலைதட்டி
இட்லி அரிசி        – 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்    – 4
கறிவேப்பிலை    – 1 டேபிள் ஸ்பூன்
தனியா        – 1 டீஸ்பூன்
சீரகம்            – 1/2 டீஸ்பூன்
சிறிய வெங்காயம்    – 1 கப்
உப்பு            – தேவைக்கேற்ப
செய்முறை
பாசிப்பருப்பு, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஊற வைக்கவும். ஊறியதும் மிளகாய், தனியா, சீரகம், சிறிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். பின்னர் இட்லி தட்டிலி இட்லீகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து மிளகாய் சட்னியுடன் பரிமாறவும்.
கோதுமை ரவை இட்லி
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை    – 1 கப்
கடலைப்பருப்பு    – 2 டேபிள் ஸ்பூன்
புளித்த தயிர்        – 1 கப்
எண்ணெய்        – 1 டீஸ்பூன்
உப்பு            – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய்    – 1
கொத்தமல்லி        – சிறிது
மிளகு            – 1/4 டீஸ்பூன்
செய்முறை
பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை ரவையையும், கடலைப்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியவுடன் இதனை மிக்ஸியில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர் எண்ணெய் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
ராகி இட்லி
தேவையான பொருட்கள்
ராகி (கேழ்வரகு)        – 1 கப்
உளுத்தம் பருப்பு        – 1/4 கப்
கேரட் துருவியது        – 2 டேபிள் ஸ்பூன்
முட்டைக்கோஸ் துருவியது    – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி,கறிவேப்பிலை- சிறிது
உப்பு                – தேவைக்கேற்ப
சீரகம்                – சிறிது
செய்முறை
உளுத்தம்பருப்பையும், கேழ்வரகையும் தனித்தனியாக ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்தவுடன் மாவில் பொடியாக நறுக்கிய  கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய கேரட், முட்டைக்கோஸ் மற்றும் சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இட்லித் தட்டுகளில் இட்லியாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். மிளகாய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
ஜோவார் இட்லி
தேவையான அளவு
வெள்ளைச்சோளம்    – 1 கப்
உளுத்தம் பருப்பு    – 1/4 கப்
காய்கறித்துருவல்    – 1 கப்
உப்பு            – தேவைக்கேற்ப
செய்முறை
வெள்ளைச்சோளத்தையும், உளுந்தையும் 4 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து உப்பு சேர்த்து கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். காலையில் காய்கறித்துருவல்களை இந்த மாவுடன் சேர்த்து கலந்து இட்லித்தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து சூடாகப் பரிமாறவும்.
கோதுமை ரவை பொங்கல்
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை    – 1 கப்
பாசிப்பருப்பு        – 1/4 கப்
மிளகு            – 1/2 டீஸ்பூன்
சீரகம்            – 1/2 டீஸ்பூன்
இஞ்சி விழுது    – 1/4 டீஸ்பூன்
முந்திரி        – 2
சன் ப்ளவர் ஆயில்    – 3 டீஸ்பூன்
தண்ணீர்        – 3 கப்
உப்பு            – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை    – சிறிது
செய்முறை
ஒரு குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கோதுமை ரவையை போட்டு லேசாக வறுக்கவும். பின் பாசிப்பருப்பையும் போட்டு லேசாக வறுக்கவும். பின்னர் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து, இஞ்சி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து நன்கு கிளறவும். ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்து, பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
கோதுமை ரவை கிச்சடி
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை    – 1 டம்ளர்
கேரட்            – பாதி
பீன்ஸ்            – 10
தக்காளி        – 1
பெரிய வெங்காயம்    – 1
பச்சை மிளகாய்    – 2
மஞ்சள்பொடி        – சிறிது
இஞ்சி            – சிறிது
பூண்டு        – 2 பல்
சோம்பு        – 1 டீஸ்பூன்
புதினா            – சிறிது
உப்பு, எண்ணெய்    – தேவைக்கேற்ப
செய்முறை
கேரட், பீன்ஸ், தக்காளி, பெரிய வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி , சோம்பு போட்டு தாளித்து, இஞ்சி பூண்டை நசுக்கிப் போட்டு நறுக்கிய பச்சைமிளகாய், காய்கறிகளை போட்டு வதக்கவும். பின் கோதுமை ரவையையும் சேர்த்து வதக்கி புதினா, மஞ்சள் பொடி, உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 சத்தம் வரும் வரை வதக்கவும். வெந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சேமியா மசாலா பொங்கல்
தேவையான பொருட்கள்
சேமியா        – 2 கப்
சின்ன வெங்காயம்    – 10
பூண்டு        – 10 பல்
இஞ்சி            – 1 இன்ச்
வெந்தயக்கீரை    – 1 கப்
பாசிப்பருப்பு        – 1 கப்
தண்ணீர்        – 4 கப்
உப்பு, எண்ணெய்    – தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க
மிளகாய்        – 4
மல்லி            – 1 டீஸ்பூன்
சீரகம்            – 1/2 டீஸ்பூன்
மிளகு            – 1/2 டீஸ்பூன்
பட்டை        – சிறிது
ஏலக்காய்        – 2
கிராம்பு        – 1
செய்முறை
பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியை போட்டு வதக்கி பின் வெந்தயக்கீரையை போட்டு லேசாக வதக்கி வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீரையும் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். (வறுத்த சேமியா என்றால் வறுக்க வேண்டாம். இல்லையென்றால் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவும்.) கடைசியாக சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாகக் கிளறவும். அரைத்து வைத்துள்ள மசாலாப்பொடியையும் சேர்த்து ஒரு மூடி போட்டு மூடி வேக விடவும். வெந்ததும் திறந்து கொத்தமல்லி தூவி பொட்டுக்கடலை சட்னியுடன் பரிமாறவும்.
ராகி இடியாப்பம்
தேவையான பொருட்கள்
ராகி இடியாப்பம்            – 1 பாக்கெட்
பெரிய வெங்காயம்            – 1
பச்சை மிளகாய்            – 2
கொழுப்பு நீக்கப்பட்ட மோர்        – 1 கப்
கறிவேப்பிலை            – சிறிது
உப்பு, எண்ணெய்            – தேவைக்கேற்ப
கடுகு                    – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு            – 1/2 டீஸ்பூன்
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். ராகி இடியாப்பத்தை சிறிது தண்ணீரில் ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் மோரை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். சிறிது கொதி வந்தவுடன் ராகி இடியாப்பத்தை போட்டுக்கிளறி இறக்கிப் பரிமாறவும்.
ராகி புட்டு
தேவையான பொருட்கள்
ராகி மாவு        – 1 கப்
அரிசி மாவு        – 1 கப்
துருவிய தேங்காய்    – 1/2 கப்
உப்பு            – தேவைக்கேற்ப
தண்ணீர்        – 1 கப்
செய்முறை
அரிசி மாவு, ராகி மாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசறிக் கொள்ளவும். பின் புட்டுக் குழாயில் புட்டு மாவு, பின்னர் தேங்காய் என்று ஒன்று மாற்றி ஒன்று வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கொண்டைக் கடலை குழம்புடன் சூடாகப் பரிமாறவும்.
கோதுமை புட்டு
தேவையான பொருட்கள்
பஞ்சாப் கோதுமை    – 1/4 கிலோ
தேங்காய்        – தேவையான அளவு
பாசிப்பருப்பு        – 1/4 கப்
உப்பு, எண்ணெய்    – தேவைக்கேற்ப
பச்சைமிளகாய்    – 1
வெங்காயம்        – 1
கடுகு            – சிறிது
உளுத்தம்பருப்பு    – சிறிது
செய்முறை
கோதுமையை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து, அடுப்பில் வெறும் சட்டியில் வறுத்துக் கொள்ளவும். அது பொரிந்து நல்ல வாசனை வரும் போது இறக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் சிறிது நீர் தெளித்து பிசறி சட்டையில் கட்டிகள் இல்லாமல் சலித்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை அரை பதமாக வேக வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி வேக வைத்த பருப்பு மற்றும் கோதுமை புட்டை கொட்டி தேவையான அளவு உப்பு போட்டு கிளறி, கடைசியாக தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.
நன்றி :-http://kulasaisulthan.wordpress.com/