Thursday, 23 October 2014

தேங்காய்பால் சாதம்!!!

தேங்காய்பால் சாதம்
உடம்புக்கு நல்லதா?
நம்ம நாட்டுல நம்மலவிட நம்மப்பத்தி அதிகம் கவலப்படுறது நம்ம சுத்தி இருக்குற வங்கதாங்க. ஏன்னா நாம நல்லா இருந்தா நம்மலவிட அவங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம். அதுனால நம்ம உடம்புல கொஞ்சம் சதை போட்டதை கரெக்டா கண்டுபுடிச்சு உடனே சொல்லிடுவாங்க. அதுமட்டுமில்லாமா ‘நீ ஆயில் அண்டு கொலஸ்ட்ரால் நிறைய எடுத்துக்குற. அதெல்லாம் அவாய்ட் பண்ணு’ என்று நல்லா ஓடிட்டு இருக்குற ஓடத்துல கல் எறிஞ்சுட்டு போய்டுவாங்க. அப்புறம் நம்ம மனசு கெடந்து அலைபாய்ஞ்சுட்டு இருக்கும். குண்டா இருக்குறவங்க பார்த்தா ‘நான் இவங்கல மாதிரியா இருக்கேன்?’ என கூட இருக்குறவங்கள கேட்டுக்கேட்டு, அவங்க ஓடிப் போற அளவுக்கு இம்சை பண்ணிடுவோம்.
எல்லாருக்கும்தான் அழகா இருக்கணும் அப்படிங்கிற எண்ணம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக நாம சாப்பிடாம இருந்து உடம்புக்குத் தேவையான சத்துக்களை எல்லாம் இழந்து வயதானவர்கள் போல் காட்சி அளிக்க வேண்டுமா? அது தேவையில்லை. கொலஸ்ட்ரால் இரண்டு வகையாக இருக்கு. அதில் கெட்ட கொலஸ்ட்ராலை கம்மி பண்ணிட்டு, நல்ல கொலஸ்ட்ராலை சேர்த்துக்கலாம்னு டாக்டர்களே நமக்கு அட்வைஸ் பண்ணுகிறார்கள்.
அதில் நல்ல கொலஸ்ட்ரால் இருக்குறது தேங்காய் பாலில். தேங்காயில் உள்ள சக்கை நம் உடலுக்குத் தேவையில்லை. ஆனால் பால் மிக அவசியம். நமது உடலின் சூட்டைத் தணித்து குடல்புண், தோல் சுருக்கம் இவையெல்லாம் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தி தேங்காய்ப்பாலில் இருக்கிறது. அதனால் வாரம் ஒருமுறையேனும் தேங்காய் சம்பந்தமான உணவுகளைச் செய்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. அதில் தேங்காய்ப்பால் சாதம் மிகவும் உடலுக்கு நல்லது. செய்வதும் மிகவும் சுலபம்.
இனி தேங்காய்ப்பால் சாதம் செய்வது எப்படி என்பதைப்பற்றிப் பார்ப்போம்.
தேவையானவை :
பாசுமதி அரிசி - ஒரு கப்
சீரகம் - ½ டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
முந்திரிப்பருப்பு - 5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - ¾ கப்
செய்முறை :
குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பச்சைமிளகாய் போட்டு வெடித்ததும், அரிசி, தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு இவற்றைக் கலந்து வேக வைக்க வேண்டும். குக்கரில் ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். சிறிது நேரம் கழித்து அந்தச் சாதத்தில் முந்திரிப்பருப்பை லேசாக வறுத்துக் கொட்டி கிண்டி விடவும்.
சுவையான தேங்காய்ப்பால் சாதம் ரெடி. இதுனுடன் நாம் குருமா அல்லது கறிக்குழம்பு ஊற்றிச் சாப்பிட்டால் சுவை அதிகமாக இருக்கும்.
செய்து ருசித்துச் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க.

http://www.kavvinmedia.com/