Friday 3 October 2014

ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் இண்டர்னெட் கனெக்சன்!!!

ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் இண்டர்னெட் கனெக்சன்!!!

ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் இண்டர்னெட் கனெக்சன்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெக்சன் ஏற்படுத்துவது எப்படி?
ஒரு ஆன்ராய்டு மொபைல் மூலம் என்னவென்னாலும் இருந்த இடத்திலே இருந்து கொண்டு செய்யமுடியும் என்ற நிலை வந்து கொண்டு இருக்கிறது இன்றைய நவீன தொழில் நுட்பம்.
இந்த பதிவு மூலம் நாம் பார்க்க போவது நமது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் லேப்டாப்,டேப்லெட் பி.சி மற்றும் டேபிள் கணிணிக்கு எவ்வாறு வைஃப்பி (wi-fi) தொடர்பு மூலம் இண்டர்னெட் இனைப்பு ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.
வேண்டிய அமைவு முறை:
இந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் மற்றும் அதில் வைஃப்பி மூலம் இணைய இனைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர் நிறுவபட்டு இருக்க வேண்டும்.இதை அறிந்து கொள்ள உங்கள் மொபைல் நிறுவன கைடை பார்க்கவும்.
சரி இனி இதை எவ்வாறு நிறுவுவது என்பதை பார்க்கலாம்.
step—>1 மொபைலில்setting மெனுவுக்கு போகவும்
step—>2 அடுத்து wireless and network செல்லவும்
step—>3 அடுத்து Tethering and portable hotspot செல்லவும்
step—>4 அதில் portable wi-fi hotspot setting என்பது கானப்படும்.அதை கிளிக்
செய்யவும்.
step—>5 இதனுள் இரண்டு மெனுக்கள் கானப்படும்.அதில் configure portable wi-fi
hotspot என்பதை கிளிக் செய்யவும்.
step—>6 அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைல்மாடல் பெயர்
கொடுக்கபட்டு இருக்கும் அதில் வேண்டுமானால் உங்கள்
பெயரை வைத்து கொள்ளலாம்.
step—>7 அடுத்த மெனுSecurity இதில் நீங்கள் உங்கள் இணைய இணைப்பை
யார்வேண்டுமானாலும் பயன்படுத்த open என்பைதை
தேர்தெடுக்கலாம்.குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன் படுத்த
WAP2PSK என்பதைதேர்ந்தெடுத்து பாஸ்வேர்டு அமைத்து
கொள்ளலாம்.பிறகு save கொடுக்கவும்.
step—>8 மேல் புறம் save கொடுத்த பிறகு வெளியில் wi-fi Hotspot என்பதில் டிக்
செய்யவும்.இப்போது சிறிய இடைவெளியுடன் ஒரு புதிய
லோகவுடன் மொபைல் மேல் புறத்தில் ஒரு புதிய ஊதா நிற
சிம்பல் கானப்படும்.அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் ஒரு
இணைய இணைப்பு wi-fi ஆக செயல் பட தொடங்கி விட்டது.இனி
உங்கள் லேப்டாப்,டெஸ்க் டாப் கணிணி,டேப்லெட் பி.சி யில்
இணைய இணைப்பை உபயோகிக்கலாம்.