Thursday 23 October 2014

நெய் முறுக்கு !!!

நெய் முறுக்கு !!!
தேவையானவை:
கடலை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு கப்
எள் – ஒரு டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும்.
பிசைந்த மாவை அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, வேக வைத்து எடுக்கவும். ‘கரகர’ வென கரையும் இந்த நெய் முறுக்கு. செய்முறையும் எளிது.

--             

----

எண்ணெய் கத்தரிக்காய்
காரக்குழம்பு

இது ஐயர் ஆத்துல மட்டும் ஸ்பெஷல் இல்லைங்க. நான்வெஜ் சாப்பிடுற வங்க வீட்டுலையும் ஸ்பெஷல்தான். கத்தரிக்காய் காரக்குழம்பு என்று சொன்னாலே நாக்குல எச்சி ஊறும்ங்க. இந்தக் குழம்பை செய்து பார்த்து ருசித்தவர்களுக்குத்தான் இதன் சுவை தெரியும். இனி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையானவை:
கத்தரிக்காய் - 1/4 கிலோ
புளி - 100 கிராம்
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம் (உறித்தது)
தேங்காய் –அரை மூடி
வெந்தயம் - தாளிக்க
தாளிக்கிற வடகம் - சிறிதளவு
மிளகு-10
சோம்பு, கசகசா - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 10 ஸ்பூன்
மல்லித்தூள் - 5 ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
மல்லித்தழை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேங்காயை சோம்பு, கசகசா வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின் கத்தரிக்காயை நான்றாக நறுக்கி அதில் தேங்காய் விழுது மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சிறிதளவு சேர்த்து பிசைந்து உள்ளே வைத்துவிடவும். அந்த கத்தரிக்காயை வடசட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் போட்டு வதக்கவும். நல்ல பொன்னிறமாக வதங்கியவுடன் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு, மிளகு, வடகம் போட்டு தாளித்து அதில் வெங்காயம், தக்காளி கருவேப்பிலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கிய பின், எடுத்து வைத்த கத்தரிக்காயைப் போட்டு விடவும். புளி கரைசலை ஊற்றி அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், போட்டு மூடி வைத்து விடவும். குழம்பு நன்றாகக் கெட்டியான பின் எடுத்து அதன் மீது சிறிது எண்ணெய் ஊற்றி கொத்துமல்லித் தழையைத் தூவிவிடுங்கள். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் தேவாமிர்தம் தான் போங்க. செய்து பாருங்க. அப்புறம் சொல்லுங்க சுவை எப்படினு..
எண்ணெய் கத்தரிக்காய்
காரக்குழம்பு

by பிரதிபா i

.http://www.kavvinmedia.com/

-----