சுவாச பிரச்சனைகளும் துளசியின் பங்கும்...
மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.
வளிமுதலா வெண்ணிய மூன்று.
வாத, பித்த, கபம் மாறுபாடே நோய் உண்டாக காரணம் என்று திருவள்ளுவர் நமக்கு விளக்கியுள்ளார். செயல்கள், உணவு இவற்றின் அடிப்படையில் ( வாதம், பித்தம், கபம்) இவைமூன்றும் நிலை பிறழ்கின்றன. சோம்பலால் வாதமும், மிதமிஞ்சிய வேலையால் பித் தமும், ஓழுங்குமுறை நழுவிய செயல்களால் கபமும் கூடுகிறது.
இயற்கையில் விளையும் உணவுப்பொருட்களில் வாதபித்தகப தன்மைகள் இயல்பாகவே அமைந்துள்ளன. சில உணவுகளில் இவை அதிகளவில் இருப்பதால் அந்த வகை உணவுகளை உண்ணும் போது அன்றே அவற்றின் விளைவுகளை நம்மால் உணரமுடிகிறது. உதாரணமாக உருளை, வாழை, இறைச்சி இவற்றால் வாதம் அதிகமாகிறது. கத்திரி, பப்பாளி, கோழி இறைச்சி ஆகியவற்றால் பித்தம் அதிகமாகிறது. வெங்காயம், தக்காளி, முட்டை ஆகியவற்றால் கபம் மிகுதியாகுகிறது.
இந்த மூன்றும் தன்நிலையில் இருந்து பிறழ்வதால் நோய் உண்டாகிறது. இந்த மூன்றையும் சரியான அளவில் வைக்க சில மூலிகைகள் உதவுகின்றது. வாதத்தை சீர்செய்ய வில்வமும், பித்தத்தை சரிசெய்ய வேம்பும், கபத்தை சீராக்க துளசியும் பயன்படுகின்றன. இவற்றில் துளசி எவ்வாறு கப நோய்களுக்கு மருந்தாகிறது என்று பார்ப்போம்.
ஐயம் வயிறுளைச்சல் அத்திசுரம் தாகமும்போம்
பையசர மாந்தம் பறங்குங்கான் மெய்யாக
வாயின் அரோசகம்போம் வன்காரஞ்சூடுள்ள
தூயதுளசிதனைச் சொல்.
பையசர மாந்தம் பறங்குங்கான் மெய்யாக
வாயின் அரோசகம்போம் வன்காரஞ்சூடுள்ள
தூயதுளசிதனைச் சொல்.
ஐயம் என்றால் கபம் சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்று, உளைச்சல், சுரம், நீர் வேட்கை, மாந்தம், நாவின் சுவையின்மை இவை அனைத்தையும் துளசி போக்கிவிடும் என்று இப்பாடல் விளக்குகிறது.
துளகி குணமாக்கும் நோய்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். ஆனால் துளசி, கபம் சம்பந்தமான நோய்களை குணமாக்குவதில் பெரும்பங்கு துளசிக்கு உண்டு.
துளசியின் இத்தனை மருத்துவகுணங்களும் கபம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் என்று தற்போதைய ஆய்வாளர்கள் ஆய்வில் தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் இருமல், சளி, கோழைக்கட்டு, மூக்கில் நீர் வழிதல், தலைவலி, மூக்கடைப்பு, மூச்சுக்குழல் அழர்ஜி, நெஞ்சுச்சளி, மூச்சிவிட சிரமப்படுதல் போன்ற பல சுவாசம் சம்பந்தப்பட்ட கப நோய்களை துளசி கு ணமாக்கும் சக்தி கொண்டது. பத்து கிராம் அளவு துளசி இலையை எடுத்து கசக்கி சாறு பிழிந்து காலை, மாலை இருவேளை ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் சளி தொல்லை எளிதில் தீர்ந்துவிடும்.
ஐந்து கிராம் துளசி இலையை இரண்டு மிளகு சேர்த்த அரைத்து காலைமாலை வேளைகளில் வெந்நீரில் குடித்து வந்தால் காய்ச்சலுடன் கூறிய சளி குறையும். சிறிது துளசி இலைகளுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து அந்த சாறை சிறிது தேன் சேர்த்து உட்கொண்டால் ஆஸ்துமா, நெஞ்சுசளி, சளியுடன்கூடிய சுரம் குணமாகும். தொண்டை கரகரப்பு, அடைப்பு, போன்ற நேரங்களில் சிறிது துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த பின் அந்த நீரை தொண்டையில் படும்படி கொப்பளித்தால் உடனே குணமாகும்.