Wednesday, 1 October 2014

திருமணப் பொருத்தம் பார்க்க!!!

  1. தினப்பொருத்தம் 
  2.  கணப்பொருத்தம்
  3.  மகேந்திரப்பொருத்தம்
  4.  ஸ்திரி பொருத்தம் 
  5.  யோனி பொருத்தம் 
  6.  ராசி பொருத்தம் 
  7.  ராசி அதிபதி பொருத்தம் 
  8.  வசிய பொருத்தம் 
  9.  ரஜ்ஜிப்பொருத்தம்
  10.   வேதைப்பொருத்தம்     

தினப் பொருத்தம்  ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.

தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள். நாள் தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம். அதுவே நாள் ஷேத்திரம் இது மருவி நட்சத்திரம் என ஆகியது. எனவே இந்த தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று


கணப் பொருத்தம் –கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற சுகம் மற்றும் ஒற்றுமை தீர்மானிக்கப்படும்.

கணம் என்றால் கூட்டம் என பொருள்படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இருவரின் இல்லற சுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப்படும். தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவம் & அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி மனுஷம்& பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ராட்சஸம்& கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சத்யம் தேவ கணத்தினருக்கு மனோபலம் உண்டு. ராட்சஸ கணத்தோர் உடல் பலம் மிக்கவர். மனுஷ கணம் இருபலரும் உண்டு. பெண்& ஆண் நட்சத்திரங்கள் ஒரே கணமெனில் உத்தமம். இரண்டில் ஒன்று தேவகணமும் மற்றும் மனுஷ கணமெனில் உத்தமம். பெண் தேவகணம் & ஆண் ராட்சஸ கணமெனில் மத்திமம், பெண் ராட்சஸ கணம் & ஆண் தேவகணம் பொருத்தமில்லை. பெண் ராட்ச கணம் & ஆண் மனுஷ கணம் பொருத்தமில்லை.  

மகேந்திரப் பொருத்தம் திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வர்ம் செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்

புத்திம விருத்தி தரும் பொருத்தம் இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது எனில் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்தமில்லை. இப்பொருத்தம் அவசியமே. ஆனால் முக்கியமானது அல்ல. இப்பொருத்தம் இல்லையெனில், ஜாதகங்களில் புத்திரஸ்தான பலனைக் கொண்டு ஜோதிடர் தீர்மானிப்பார். .

ஸ்திரீ தீர்க்கம் –  திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம்.

பெயரே சொல்கிறது. பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறுபாடு அடைகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் எனில் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை எனில் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேல் என்றால் உத்தமம். இப்பொருத்தம் இல்லையெனிலும் பெண் ஜாதகத்தின் ஆறாம் ஸ்தானம் அல்லது எட்டாம் ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில் பணிரெண்டாம் ஸ்தானம் அல்லது இரண்டாம் ஸ்தான பலம் மூலம் ஜோதிடர்கள் தீர்மானிக்க இயலும் 


யோனிப் பொருத்தம் – கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.

இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆ& பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. உத்திராடட்ம நட்சத்திரம் மட்டும் கீரி எனவும் சில சாஸ்திர நூல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண்&பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம். 

ராசி அதிபதி பொருத்தம் – கணவன் மற்றும் மனைவி அவர்களுக்காக செய்யும் காரியசித்திக்கு உதவும்.

பனிரெண்டு ராசிகட்கு அதிபதி உண்டு. அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபத, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.  


வசியப் பொருத்தம் – கணவன் மனைவிக்கிடையில் இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட அது ஆயுட்காலம் முழுதும் நிலைத்திருக்க உதவும் பொருத்தம்.இப்பொருத்தம் கணவன் & மனைவி அன்னியோன்ய உறவை குறிகாட்டும். ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளே வசியமாக அமையும். இது அமைந்தால் இன்னும் சிறப்பாகும். 


ரஜ்ஜுப் பொருத்தம்  தலை, வயிறு, கழுத்து, தொடை, பாதம் என்று ஐந்து வகை உட்பிரிவுகள். திருமாங்கல்யக் கயிறு மற்றும் அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியப் பொருத்தமாக இது விளங்குகிறது.

சரசோதிமலை எனும் தமிழ் ஜோதிட காவியம் இவ்வித பத்து பொருத்தங்களினால் உண்டாகும் பலன் எவை என குறிப்பிடும் சமயம் "இரச்சுமங்கலியங்" என தெளிவாக சொல்கிறது. இவ்விருவர் இணைவால் உண்டாகும் திருமண வாழ்வின் நீண்ட, மத்திம குறுகிய ஆயுளை ரச்சு பொருத்தம் தீர்மானிக்கிறது. இதை நாட்டு புற வழக்கில் சரடு பொருத்தம் என்றும் கூறுவார்கள். இந்த சாஸ்திரத்தின் படி, மிகவும் புனிதமாக ஏற்கப்பட்டுள்ள திருமாங்கல்ய கயிறு&அதன் ஆயுளை தீர்மானிப்பதால் இது முக்கியமாக ஏற்கப்படுகிறது. ஏனைய பொருத்தம் அமைந்த இந்த ரச்சு எனும் மாங்கல்ய சரடு பொருத்தம் இல்லையெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரச்சு மட்டுமே பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்டு அமையும். கூடி அமைந்த காதல் திருமணங்கள் தோல்வியை அடைவது ரச்சு பொருத்தம் காரணம் என்பது எமது அனுபவம் இனி இது உண்டாகும் என பார்வை செய்வோம். நட்சத்திரங்கள் ஐந்து வகை ரச்சு என பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பாதம், தொடை, உதரம், கண்டம் சிரசு எனப்படும். ஆண்& பெண் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது.  


வேதைப் பொருத்தம்  கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க உபயோகப்படும்.

வேதை எனும் சொல்லுக்கு துன்ப நிலை என பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரச்சுவாக ரச்சு பொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரச்சு பொருத்தம் குறுகிய கால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமைந்து முடியலாம். ஆனால் வேதை நட்சத்திரம் இணைந்தால் அந்த குறுயி கால மண வாழ்வும் துன்பமாகவே அமையும்.  


 திருமணப் பொருத்தம் பார்க்க :http://astrology.dinakaran.com/ThirumanaPorutham.aspx