Monday, 13 October 2014

சமையல் குறிப்புகள்!!!

சமையல் குறிப்புகள்



* பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாகநறுக்கி          வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாகஇருக்கும்.
*   வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த                     
        நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும்.    
    இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
*     சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால்      
    அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
*     சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால்ஊற்றிக் 
    கிளறி இறக்கினால்பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
*     தேங்காய்த் துருவல் மீதியானால்அதை லேசாக வதக்கி சிறிதுஉப்பு 
     சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் 
     கொள்ளலாம்.
*     உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்தஉருளைக்கிழங்கை 
     மசித்து கலந்து வடை செய்தால்வடை எண்ணெய் குடிக்காமல் 
      மொறு  மொறுவென்று ருசியாக இருக்கும்.
*     கேசரிபால்கோவாதேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் 
       பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல்எளிதாக கிளறலாம்.
*     ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து 
     செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
*     தோசை மாவுபொங்கல்போன்றவற்றில் சீரகத்தை கைகளால்சிறிது 
     தேய்த்துப் போட்டால்சுவையுடன் மணமாக இருக்கும்.
*     பாகற்காயுடன் உப்புமஞ்சள்தூள்வெல்லம்எலுமிச்சை சாறுஆகியவை 
       சேர்த்துகலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால்கசப்புகாணாமல்                   போய்விடும்.
 *   இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்துமற்ற      
    சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாகஇருக்கும்.
 *    தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்புபாதாம்பருப்பு 
    இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி     
    செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடுவில்லை போடும்போது      
    தேங்காயும் உதிராமல் இருக்கும்.
*     மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிதுஉப்பை 
     சேர்த்து வறுக்கவும்.
*     பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப்பாலைச் 
    சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும்இருக்கும்.
*     வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் 
     பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பைதடவிக்கொண்டு 
     நறுக்கவேண்டும்.
*     தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும்சேர்த்து 
    ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொருமொருவென 
     இருக்கும்.
 *    எலுமிச்சைதேங்காய்புளிதக்காளி சாத வகைகள் செய்யும் முன் 
     சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய்விட்டுக் 
    கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாகசுவையாக     
        இருக்கும்.
*     உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும்வெடிக்காமல் 
   இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும்.இதனால்     
  உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.
*     தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக 
  அறைத்து ஊற்றவும்குருமா வாசனையுடன் சுவையாகவும்இருக்கும்.
 *    துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன்வரமிளகாய்,பூண்டு 
        கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால்பொடி                
               மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
*     நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை 
    போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.
*     கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டிசர்க்கரையைச் 
   சேர்த்துச் சமைக்க வேண்டும்.
*     குழம்பிலோரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி 
      சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால்அதிக உப்பை அந்த     
      சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.

*   முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவைவெளியில் 
   வராமல் இருப்பதற்குவேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் 
    வினிகரை விடவும்அவ்வாறு விட்டால்முட்டையின் ஓடு 
       வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

பாலை காய்ச்சுவதற்கு முன்அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால்சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால்பால் பாத்திரத்தில் அடி பிடிப்பதைதவிர்க்கலாம்.

பால் புளிக்காமல் இருப்பதற்குஏலக்காயை பால் காய்ச்சும் போதேஅதனுடன் சேர்க்கவும்அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால்புளிக்காமல் இருக்கும்.

தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சிலதுளிகள் வினிகரைத் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

எண்ணெய் கறையை அழிப்பதற்குஎலுமிச்சம் பழத்தை இரண்டுதுண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும்பின்னர் அந்ததுண்டுகளை வைத்து தேய்க்கவும்.

காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாதுஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.

உபயோகமான சில சமையல் குறிப்புகள்
சில சமையல் குறிப்புகள் நமக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.அந்த சமையல் குறிப்புகளை எல்லாம் தொகுத்து இங்குவழங்கியுள்ளேன்இவை படித்ததில் பிடித்ததுநானும் இனிமேல் தான்உபயோகப்படுத்திப் பார்க்க வேண்டும்.
புதிதாய் அரைத்த தோசை மாவில் உடனே தோசை ஊற்றினால்தோசை சுவையாக இருக்காதுஅந்த மாவில் புளித்த தயிர் ஊற்றி 10நிமிடங்கள் கழித்து ஊற்றினால் தோசை மொறு மொறுவென்றுஇருக்கும்.

கட்லட் செய்யும் போது பிரட்தூள் இல்லாவிட்டால் அதற்கு பதில்ரவையை நெய்யில் வறுத்து விட்டு உபயோகிக்கலாம்.

தயிர் சாதத்தில் கடுகுக்கு பதில் ஓமம் சேர்த்து தாளித்தால்மணமாகவும்சுவையாகவும் இருக்கும்இது அஜீரணத்திற்கு நல்லது.

சேப்பங்கிழங்குகத்திரிக்காய் இவற்றை வதக்கும் போது கொஞ்சம்கடலை மாவைத் தூவி வதக்குங்கள்கொழகொழவென்று சேராமல்சிவந்து முறுமுறுவென்று ஆகும்எண்ணெயும் அதிகம் வேண்டாம்.

பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு எண்ணெயையோ அல்லதுஇரண்டு பல் பூண்டையோ போட்டால் பருப்பு வெகுவிரைவில் வெந்துவிடும்.

பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டிசர்க்கரையும் சேருங்கள்ஓன்று போல் பட்டாணி வேகும்அதன்நிறமும் மங்காது.

பாலை உறைக்கு ஊற்றும் போது அதில் கொஞ்சம் அரிசிக்கஞ்சியைகலந்தால் பெயர்த்து எடுக்கும்படி கெட்டித் தயிராக மாறிவிடும். (இப்போ எங்கேங்க அரிசிக்கஞ்சி?????? எல்லாமே ரைஸ் குக்கர் மயம்தானே?????? )


குழம்பு தண்ணியாக இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் சோளமாவை,கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்குழம்புகெட்டியாகி விடும்.