Tuesday, 21 October 2014

பயனுள்ள இணைய தளங்கள் !!!



பயனுள்ள இணைய தளங்கள் !!!
இந்த 7 விஷயங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!!
**********************************************************
தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விஷியங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஆன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.
ஆன்லைன் மூலம் பல தரப்பட்ட விஷியங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விஷியங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஒரு சில விஷியங்களை நீங்கள் ஆன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை அதை பற்றி கிழே பார்ப்போம்.
1) போட்டோகிராபி
நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிபடையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசைபடுகிறீர்களா http://photo.net/ என்ற இணையளத்தை நீங்கள் பயன்படுத்தலாம். போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள http://www.deepreview.com/மற்றும்http://photo.tutsplus.com/articles/round-ups/100-helpful-photography-tutorials-for-beginners-and-professionals/போன்றவைகளை பயன்படுத்தலாம்.
2) கம்பியூட்டர் புரோகிராமிங்
நீங்கள் கம்பியூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் http://www.codecademy.com/ என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.
3) மொழி
எதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவர்கள்http://www.openculture.com/freelanguagelessons இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.
4) சமையல்
சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள்http://www.simplyrecipes.com/ மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.
5) ஓவியம்
ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள http://artyfactory.com/மற்றும்http://www.instructables.com/index ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.
6) தற்காப்பு கலை
உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள் http://lifehacker.com/5825528/basic-self+defense-moves-anyone-can-do-and-everyone-should-know இணையதளத்தை பயன்படுத்தலாம்.
7) நடனம்
நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால்http://www.dancetothis.com/ மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.