Tuesday, 14 October 2014

ஸப்தபதி!!!(7 மந்திரங்கள் முடிந்தால்தான் விவாஹம் முடிந்ததாகப் பொருள்.)

ஸப்தபதி
பெண்ணின் வலது காலை மாப்பிள்ளை இடது கையால் பிடித்து ஒவ்வொரு அடியாக ஏழு அடி எடுத்து வைப்பதை ஸப்தபதி என்று குறிப்பிடப்படுகிறது. விவாஹ க்ரியைகளிலேயே இது மிகவும் பொருள் பொதிந்தது. ஒரு பெண்ணும், ஆணும் இல்லற வாழ்க்கையை எப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்க வேண்டும் என்பது பற்றி வேதம் மிக உயர்ந்த உதாரணங்களைக் கொண்டு அழகாக விளக்கிக் கூறியுள்ளது.
வரன் வதுவைப் பார்த்து "ஏ பெண்ணே, உன் கையை வேதமந்திர பூர்வமாகப் பற்றி என் சொத்தாக ஆக்கிக்கொண்ட பின், என் தர்ம பத்தினியாக என்னுடன் முதன் முதலாக அடி எடுத்து நடந்து வரப்போகிறாய். உன்னை எனக்கு தர்மபத்தினியாக்கிக் கொடுத்த அந்த தேவர்களின் முன்னிலையில் நான் விஷ்ணு பகவானை, உன்னுடனான இல்லறத்திற்கு எனக்குத் தேவையான ஏழுவிதமான பாக்கியங்களை அருளும்படி கோரப்போகிறேன்" என்று அவளுடைய காலைப் பற்றி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் ஒவ்வொரு விண்ணப்பமாக வெளியிடுகிறான்....
7 மந்திரங்கள் முடிந்தால்தான் விவாஹம் முடிந்ததாகப் பொருள்.
"ஏகம் இஷே விஷ்ணுத்வாந்வேது" ... முதலடியால் "அன்னங்கள் குறைவின்றி கிடைக்க விஷ்ணு உடன் வரட்டும்"
"த்வே ஊர்ஜே ..." இரண்டாமடியால் "நம் தேஹத்தின் ஆரோக்யத்தை ரக்ஷிக்க விஷ்ணு தொடரட்டும்"
"த்ரீணி வ்ரதாய..." மூன்றாமடியால் "வ்ரத கலாசாரங்களை காக்க விஷ்ணு உடன் வரட்டும்"
"சத்வாரி மாயோபவாய" நான்காவதால் "ஸகல இன்பங்களும் கிட்ட விஷ்ணு உடன் வரட்டும்"
"பஞ்ச பசுப்பய:" ஐந்தாவதால் "வளர்ப்பு ப்ராணிகளை நல்கி ரக்ஷிக்க விஷ்ணு உடன் வரட்டும்"
"ஷட்ருதுப்ய:" ஆறாவதால் "ஆறு பருவ காலங்களும் நமக்குச் சாதகமாக விஷ்ணு உடன் வரட்டும்"
"ஸப்தஸப்தப்ய:..." ஏழாவதால் ஏழுவிதமான யாகங்களும், அதன்பயன்கறும் நல்க விஷ்ணுவும் வரட்டும்" என்று விஷ்ணுவை ப்ரார்த்திக்கிறான். ஹோதா, ப்ரசாஸ்தா, ப்ராஹ்மணாச்சம்ஸீ, போதா, நேஷ்டா, அச்சாவாக, ஆக்நீத்ர என்ற 7விதமான ருத்விக்குகளை (யாகத்தில் பங்ககேற்போர்) கொண்டு செய்யப்படுகிற ஸோம யாகாதி ஸத்கர்மாக்களை அநுஷ்டிக்கும்படியான பாக்யம் ஏற்பட ஸ்ரீமந்நாராயணன் தொடர்ந்து வந்து அநுக்ரஹிக்கட்டும்.
7ம் அடி முடிந்ததும் தொடர்ந்து ஜபிக்கப்படவேண்டிய மிக உயர்ந்த கருத்துடைய மந்த்ரம்:
"ஸகா ஸப்தபதாபவ..." என்கிற மந்திரத்தால் தன் புதிய இளம் மனைவியிடம் நாம் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்பதை பகிர்ந்துகொள்கிறான்...
"ஏ வதுவே, ஏழு காலடி வைத்து என்னுடன் தொடர்ந்த நீ, இன்று முதல் எனக்கு வேதப்ரமாணமான ஸகி (ஸம்ஸ்க்ருதத்தில் நண்பனுக்கு "ஸகா" என்றும் அதற்கு பெண்பால் "ஸகி" என்றும் பெயர்) ஆகிவிட்டாய். நாம் பரஸ்பரம் நண்பர்காளகி விட்டோம். இந்த நட்பிலிருந்து நான் ஒரு போதும் நழுவமாட்டேன். நீயும் நம் நட்பில் இந்தப் பாராங்கல்லைப்போல் (அம்மி போல்) உறுதியுடன் இருப்பாயாக. நான் விஷ்ணுவிடம் வேண்டிப்பெற்ற அனைத்தையும் நாம் இருவரும் சேர்ந்து அனுபவிப்போம்.
இவ்வுலகில் ஒன்றைத் தவிர்த்து மற்றொன்று நிலைக்காததான பல்வேறு தத்துவங்கள் போல் நாம் இருவரும் இணை பிரியாதிருப்போம். நான் ஆகாயமானால் நீ பூமியாக இரு, நான் உயிரணுவானால் நீ உயிரைத் தாங்கும் கர்பக்ருஹமாய் இரு, நான் மனமானால் நீ வாக்கு எனும் சொல்லாக இரு (மனதால் நினைக்காத எதையும் வாயினால் பேச இயலாது), நான் ஸாம கானமானால் அந்த கானத்திற்கு கருப்பொருளான ருக்காக விளங்கு, இப்படி அநுஸரணையாய் இருவரும் இருந்து இன்பத்தின் சிகரங்களை எட்டுவோம், ஈடு இணையில்லா புத்திரர்களையும், மஹாலக்ஷ;மிபோன்ற பெண் மகவையும் பெற்று கிழத்தன்மை அடையும்வரை சுகித்துக்கிடப்போம் வா என் ஸூந்ருதே"