Thursday, 9 October 2014

எளிய இயற்கை வைத்தியம்!!!

குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ இருமல், சளி மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்களுக்கு எளிய இயற்கை வைத்தியம் இது; எங்கள் குடும்ப வைத்தியம்கூட!

சித்திரத்தை, துளசி, கருந்துளசி மற்றும் கற்பூரவள்ளி இவற்றின் இலைகளை சரிசம அளவு பறித்துக் கொண்டு நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு, இலைகளின் அளவுக்கு ஏற்றாற் போல தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். காய்ச்சிய தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொண்டு நாள்தோறும் மூன்று வேளை என்று குறைந்தது மூன்று நாட்கள் குடித்து வந்தால் சளி, இருமல் மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.


ஆங்கில மருந்துக்கள் பயன்படுத்தி பின்விளைவுகளை அனுபவிப்பதைவிட இறைவனின் படைப்பின் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி உடல் நலம் பெறலாமே!