Friday, 24 October 2014

Ginger-Dry Ginger!!!

இஞ்சி(Ginger),சுக்கு
இஞ்சி..இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.
தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு குவளை மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.”
இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.
இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.
மருத்துவக் குணங்கள்: இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.
இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து 15 மில்லியளவாக 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும்.
200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.
இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.
10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), நுரையீரல், சளி அடைப்பு நீங்கும்.
முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.
இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜ“ரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.
சுக்கு
உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்கு கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்
பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்.சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே
மருத்துவப் பயன்கள்:
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.
பொதுப்பயன்கள்:
பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.
ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும்.
இது பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.
இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.
இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சியை நன்றாக சுடவேணும் அதை நசுக்கி உடம்பில் தேக்க பித்த, கப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
ஆக முன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி. பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாக தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, “பைப்ரினோலிடிக்” செயற் பாடுகுன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பை உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இஞ்சியையும் சுக்கையும் உபயோகிக்கும் போது சுத்தி செய்தல் மிக முக்கியமானது .இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்ப்படும்.
இஞ்சியை சுத்தி செய்ய அதன் மேல் தொலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும் .அதே போல் சுக்கை சுத்தி செய்ய அதன் மேல் சுண்ணாம்பை
தடவிகாயவைது ,பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும் .இது மிக முக்கியமானது சுத்தி செய்யாமல் உபயோகிக்கவேண்டாம்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.
இஞ்சியை அளவோடு உட்கொள்ள வேண்டும். தேவைக்கு மேலாக உபயோகிக்கும் பொழுது இஞ்சி – இரத்தத்தில் உறையும் நேரத்தை அதிகப்படுத்தி விடும். அதாவது, அடிபட்டாலோ, கையில் கத்தி ஏதாவது வெட்டி விட்டாலோ இரத்தம் உறைய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே அளவுடன் இஞ்சியை உபயோகிக்க வேண்டும். அளவிற்கு அதிகமாக உபயோகிக்க கூடாது.   







o