Saturday, 11 October 2014

குழந்தைகள் அறிவுப்பூர்வமாக கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்!!!

குழந்தைகள் அறிவுப்பூர்வமாக கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்
தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டமான இணையத்தில் இன்றைய குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. Kidsmart
லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விடயங்களை கற்றுத்தருகிறது. சாட்டிங், சோசியல் நெட்வொர்க் தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விசயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.
முகவரி:http://www.kidsmart.org.uk/
2. National Geographic Kids
அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society [National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்] குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விடயங்களை குழந்தைகள் கற்றுக் கொள்ளலாம்.
3. Busy Bee kids crafts
குழந்தைகளுக்கு கைத்தொழில்கள் செய்யக் கற்று தரும் தளம். (Craft என்றால் கைத்தொழில் என்று கூகுள் தாங்க சொல்லுச்சு.... )
4. Kids Health
மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.
முகவரி : http://kidshealth.org/kid/
5. Nasa Kids
NASA என்றால் என்னவென்று சொல்ல அவசியமில்லை என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கான நாசாவின் தளம்
முகவரி:http://www.nasa.gov/audience/forkids/kidsclub/flash/index.html