Thursday, 23 October 2014

உருண்டைக் குழம்பு !!!

உருண்டைக் குழம்பு !!!

உருண்டை குழம்பு என்பது மிகவும் சுவையானதாகவும் தினமும் பருப்பு சாம்பார் காரக்குழம்பு என வைப்பவர்களுக்கு இந்தக் குழம்பு வித்தியாசமானதாக இருக்கும் இரண்டு நாட்களுக்கு சூடு பண்னிக்கூட சாப்பிடலாம்.  சூடு பண்ணப்பண்ண இதன் சுவை அதிகரிக்கும். அதனால் இந்த குழம்பை டிரை பண்னிப் பாருங்க வித்தியாசமான குழம்பு பண்னிய திருப்தியும் கிடைக்கும் டேஸ்ட்டும் நல்லா இருக்கும்.
. தேவையான பொருட்கள்;
துவரம் பருப்பு -100 கிராம்
கடலைப் பருப்பு -100 கிராம்
புளி கரைசல் - சிறிதளவு
சின்னவெங்காயம் --150 கிராம்
தக்காளி -2
மிளகாய்,மல்லி சேர்த்து அரைத்தது -3 கரண்டி
நல்லெண்ணெய் -1கரண்டி
வெந்தயம் -1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை,கொத்துமல்லி இலை -தாளிக்க
காய்ந்த மிளகாய்-5
மிளகு சீரகம் -1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் சின்னதாக நறுக்கியது-சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை;
ஒருமணி நேரத்துக்கு முன்னதாக பருப்புகளை ஊறவைத்து கொள்ளவும்.பின் அதில் மிளகு சீரகம் சோம்பு,காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.அதில் சின்னவெங்காயம் சிறிதளவு எடுத்து பொடிதாக நறுக்கிகொள்ளவும்.அதையும் தேங்காய் நறுக்கியதையும் ,உப்பும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும்.இப்பொது குழம்பு தாளிக்கலாம்.எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம் போட்டு தாளித்து கருவேப்பிலை,சின்ன வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் புளிக்கரைசலை ஊற்றி அதில் மிளகாய் மல்லி அரைத்த பொடியை கொட்டி,உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.கொஞ்ச நேரம் கொதித்ததும்.அடுப்பை குறைத்துக் கொண்டு உருட்டி வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாகப் போடவும்.(சிதறிடாமல் இருக்க சிலர் இட்லி பாத்திரத்தில் உடுண்டைகளை வேக வைத்துப் போடுவர்) ஆனால் அதை விட குழம்பு கொத்திதுக்கொண்டிருக்கும் போதே போடுவதால் மாசாலா அனைத்தும் சேர்ந்து நல்ல டேஸ்ட கிடைக்கும்.மூடி போட்டு மூடி வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி கொத்துமல்லி இலை தூவி விட்டால் அருமையான உருண்டைக் குழம்பு ரெடி.செய்து சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க.


வெண்பூசணி மோர்க் குழம்பு எப்படி வைப்பது என்பது பற்றிப் பார்ப்போம்,
தேவையான பொருள்கள்:
வெள்ளைப்பூசணி-1/4 கிலோ
துருவிய தேங்காய் -ஒரு கரண்டி
பச்சை மிளகாய் -6
சிவப்பு மிளகாய்-3
சீரகம் -ஒரு ஸ்பூன்
பொட்டுக்கடலை -ஒரு கரண்டி
பெருங்காயம்-தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு-தாளிக்க
வெந்தயம் -தாளிக்க
கருவேப்பிலை -ஒரு கொத்து கடைந்த தயிர்- 2 கப்
மஞ்சள் தூள் -ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை;
பூசணிக்காயைச் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். அதை நன்றாகக் கழுவி சிறிது நேரம் தண்னீர் தெளித்து, மஞ்சள் தூள் சேர்த்து வாணலியில் வேக வைக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பொட்டுக்கடலை இவற்றை நன்றாக அரைத்துக் கொண்டு, அந்தக் கலவையை வெந்த பூசணியில் கலக்கவும். சிறிது நேரம் அடுப்பைக் குறைத்து வைத்துக் கொள்ளவும். அந்தக் கலவை சிறிது கெட்டியாக வரும்போது தேவையான அளவு உப்பு போட்டு விடவும். பின் தயிரை விடவும். அதன்பிறகு தான் தாளிக்க வேண்டும். ஒரு சிறிய கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை வெந்து கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றி அதில் கொத்துமல்லியைத் தூவி இறக்கவும். இப்போது அருமையான வெண்பூசணி மோர்க் குழம்பு ரெடி. செய்து பார்த்துட்டு சொல்லுங்க.முக்கியமாக வெண் பூசணி நீர்ச்சத்து அதிகமுள்ள காய் உடம்பில் உள்ள தேவையற்ற நீரை எடுத்து உடலை ப்ரஷ்ஷாக ஆக்கிவிடும்.