Tuesday, 5 August 2014
பழனி பஞ்சாமிர்தம்!!!
பஞ்சாமிர்தம் , பழனி முருக கடவுளின் Special prasadam. பழனி கோவில் Websiteயில் இருந்த செய்முறையினை பார்த்து செய்தேன்...மிகவும் அருமையாக அதே மாதிரி இருந்தது.
அதில் Kandasani சக்கரை பயன்படுத்த சொன்னாங்க...நான் இதில் Brown Sugar பயன்படுத்தி இருக்கின்றேன். விரும்பினால் வெல்லம் / Coconut Sugarகூட பயன்படுத்தலாம்.
இதில் வாழைப்பழதின் கூட வேறு எந்த பழத்தினையும் சேர்க்கவில்லை.
அதே மாதிரி Diamond shape மற்றும் பெரிய கல்கண்டினை இரண்டினையும் சேர்த்து இருக்கின்றேன்.
கண்டிப்பாக நெய் சேர்க்கவும். அப்பொழுது தான் அந்த சுவை வரும். ஆனால் கொடுத்துள்ள அளவு நெயினை விட அதிகம் சேர்க்க வேண்டாம்.
பஞ்சாமிர்தம் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. நன்றாக பழுத்த சின்ன மஞ்சள் வாழைப்பழம் - 4 - 6
. பிரவுன் சுகர் (Brown Sugar) / வெல்லம் - 1/2 கப்
. பேரிச்சம் பழம் - 10 - 12
. கல்கண்டு - 1/4 கப்
. காய்ந்த திரட்சை - 1/4 கப்
. நெய் - 1 மேஜை கரண்டி
. ஏலக்காய் - 2 பொடித்தது
செய்முறை :
. வாழைப்பழத்தினை தோல் நீக்கி, பழத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும். (குறிப்பு : பொடியாக நறுக்கி கொள்வதற்கு பதிலாக அதனை கையினை வைத்து மசித்து கொள்ளலாம்.)
. அடுத்தது பேரிச்சம் பழத்தினை விதைகள் நீக்கி பொடியாக நறுக்கவும்.
. பாத்திரத்தில் நறுக்கி வைத்து இருக்கும் வாழைப்பழம், பேரிச்சம்பழம், + சக்கரை + கல்கண்டு + காய்ந்த திரட்சை + பொடித்த ஏலக்காயினை சேர்த்து கலந்து கொள்ளவும்.
. இத்துடன் கடைசியில் நெய் சேர்த்து கலக்கவும்.
. சுவையான சத்தான பழனி கோவில் பஞ்சாமிர்தம் ரெடி. இதனை உடனே அல்லது 1 நாள் வரை வெளியில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் இதனை 3 - 4 நாட்கள் வரை Fridgeயில் வைத்து சாப்பிடலாம்