Monday 11 August 2014

தேங்காய் லட்டு, தே‌ங்கா‌ய் பா‌ல் பாயாச‌ம்!!!

எல்லாருக்கும் பிடித்த சுவைகளில் ஒன்று இனிப்பு, குறிப்பாக சிறியவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
அதுவும் தேங்காயில் செய்தது என்றால் சத்துக்கள் இருப்பதுடன் மிகவும் ருசியாக இருக்கும்.


தேங்காய் லட்டு
தேவையானவை
தேங்காய்- 2 கப் (துருவியது)
கண்டென்ஸ்டு மில்க்- 2 கப்
சர்க்கரை- 1 கப்
ஏலக்காய்- 1 டீஸ்பூன்
பாதாம் – 4-5
வெண்ணெய்- 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் இதில் துருவிய தேங்காயை சேர்த்து மிதமான சூட்டில் 10- 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் இதில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறி விட்டு, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி விட வேண்டும்.
இந்த கலவையானது மிதமான சூட்டில் இருக்கும் போது கையில் வெண்ணெய் தடவி லட்டுகளாக பிடிக்கவும், சுவையான தேங்காய் லட்டு ரெடி.
++++    ++++  ++++


தே‌ங்கா‌ய் பா‌ல் பாயாச‌ம்
தேவையானவை
தே‌ங்கா‌ய் – 1
வெ‌ல்ல‌ம் – 100 ‌கிரா‌ம்
ச‌ர்‌க்கரை – 50 ‌கிரா‌ம்
ஏல‌க்கா‌ய் பொடி – 2 ‌சி‌ட்டிகை
நெ‌ய், மு‌ந்‌தி‌ரி – தேவையான அளவு
ச‌ெ‌ய்முறை
தே‌ங்காயை துரு‌வி பா‌ல் எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், முத‌லி‌ல் ‌தி‌க்காக வரு‌ம் பாலையு‌ம், ‌பிறகு வரு‌ம் பாலையு‌ம் த‌னி‌த்‌த‌னியாக வை‌க்கவு‌ம்.
வெ‌ல்ல‌த்தை பொடியா‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.
ஒரு வா‌ய் அக‌ண்ட பா‌த்‌திர‌த்‌தி‌ல் கடை‌சியாக எடு‌த்த‌ப் பாலை ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.
அ‌தி‌ல் வெ‌ல்ல‌த்தையு‌ம், ச‌ர்‌க்கரையு‌ம் சே‌ர்‌த்து ‌மிதமான ‌தீ‌யி‌ல் வை‌க்கவு‌ம். பா‌ல் சு‌ண்டியது‌ம், இர‌ண்டாவது எடு‌த்த‌ப் பாலை ‌வி‌ட்டு கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.
கடை‌சியாக கெட்டியாக இருக்கும் பாலை வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி ஏல‌க்கா‌ய் பொடியை சே‌ர்‌க்கவு‌ம்.
இறு‌தியாக நெ‌ய்‌யி‌ல் வறு‌த்து மு‌ந்‌தி‌ரியை சே‌ர்‌த்து ப‌ரிமாறவு‌ம்