Friday, 15 August 2014
நமது வீடுகளில் அவசியம் இருக்கவேண்டிய அற்புதத் தைலம்!!!
நமது வீட்டில் அல்லது நமது அக்கம்பக்கத்தில், பித்த வெடிப்பாலோ, மூட்டுவலியாலோ, அடிபட்டவீக்கத்தாலோ, சுளுக்காலோ அல்லது புண்களாலோ, யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவசியம் இந்த தகவலை அவர்களுக்கு தெரியப் படுத்தவும். அவர்களின் வேதனையைத் தீர்க்க,
சேலம் வைத்தியர். திரு. எஸ். இராஜேந்திரன் அவர்கள் இங்கே ஒரு அருமையான மேற்பூச்சு மருந்தொன்றினை சொல்கிறார். இது கைகண்ட மருந்தென்றும், குணம் நிச்சயம் என்றும் உறுதி தருகிறார்.
பித்த வெடிப்பு, மூட்டுவலி, அடிபட்ட வீக்கம், சுளுக்கு, புண்கள் போன்றவைகளை குணமாக்கும் அருமையான, அதே சமயம் மிக எளிமையான மேற்பூச்சு மருந்து.
தேவையானவை:
1. விளக்கெண்ணெய்- 50 மி.லி.
2. வேப்பெண்ணெய்- 50 மி.லி.
3. புங்கெண்ணெய்- 50 மி.லி.
4. இலுப்பெண்ணெய்- 50 மி.லி.
5. பசு நெய்- 50 மி.லி.
மேற்கண்டவைகளை கலந்து, வெயிலில் ஒரு நாள் வைத்தெடுக்கவும். பின் அடுத்த நாள் முதல், இதை மேற்பூச்சாக பயன்படுத்திவர, மேற்கண்ட நோய்களின் தாக்கத்திலிருந்து விரைவாக விடுபடலாம்.
சிறப்பான சிகிட்சையும், ஆலோசனையும் பெற விரும்புவோர், கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:
சித்தமருத்துவர் S. இராஜேந்திரன்,SMP, DSM, DY.
15, காளியம்மன் கோயில் தெரு,
கன்னங்குறிச்சி(அஞ்சல்),
சேலம்- 636008.
அலைபேசி: 9344780044.