Tuesday, 12 August 2014
உருளைகிழங்கு கொஸ்து ரெடி.!!!
சமைக்க தேவைப்படும் நேரம் – Cooking Time : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· உருளைகிழங்கு – 1
· வெங்காயம் – 1
· தக்காளி – 2
· பச்சை மிளகாய் – 2
· பூண்டு – 4 பல்
· இட்லி மாவு – 1 குழிக்கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
· மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
· தனியா தூள் – 1/2 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
முதலில் தாளிக்க :
· எண்ணெய் – 1 மேஜை கரண்டி
· கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
கடைசியில் சேர்க்க :
· கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
· வெங்காயம் + தக்காளி + உருளைகிழங்கினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி கொள்ளவும்.
· கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பினை தாளித்து பூண்டினை சேர்த்து வதக்கவும்.
· பூண்டு வதங்கியவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் உருளைகிழங்கினை போட்டு 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.
· உருளைகிழங்கு வதங்கியவுடன் பச்சைமிளகாய் + தக்காளி + தூள் வகைகளினை சேர்த்து வதக்கவும்.
· இதனை அப்படியெ சுமார் 4 நிமிடங்கள் தட்டு போட்டு வேகவிட்டு, கரண்டியால் நன்றாக மசித்து கொள்ளவும்.
· அதன் பிறகு 2 – 3 கப் தண்ணீர் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும். (குறிப்பு : தக்காளி புளிப்பாக இல்லை என்றால் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவையாக இருக்கும்.)
· கடைசியில் இட்லிமாவினை இதில் சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான எளிதில் செய்ய கூடிய உருளைகிழங்கு கொஸ்து ரெடி.
கவனிக்க:
இட்லி மாவு என்று குறிப்பிட்டு இருப்பது, அரிசி + உளுந்து கொண்டு அரைத்த இட்லி மாவு.
இட்லி மாவிற்கு பதிலாக வெரும் அரிசிமாவினை சிறிது தண்ணீரில் கலந்து கொண்டு குழம்பில் ஊற்றினால் நன்றாக இருக்கும்.
இதனை பிரஸர் குக்கரில் செய்யலாம். பிரஸர் குக்கரில் செய்வது என்றால், இட்லி மாவு சேர்க்க வேண்டாம்.