சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க... * மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை * பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை * நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை * பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை
மேலும்
இந்தியாவின் மையப்புள்ளி நகரம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இடையேயான தூரம் சாலை வழிகாட்டி பலகையில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்தியாவில் எந்த நகரத்தில் இருந்து தூரத்தில் ஆரம்பப்புள்ளி துவங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்தியாவின் மையப்புள்ளி நாக்பூர் நகரம். இந்த நகரத்தில் இருந்துதான் நமது தூரங்களின் கணக்கீடுகள் ஜீரோ மைல் கல் துவங்குகிறது. நாக்பூர் நமது நாட்டின் ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இங்கு இந்த ஜீரோ எல்லைக்கல் அமைக்கப்பட்டது. இந்த ஜீரோ எல்லைக் கல் சின்னம் நான்கு குதிரைகளும் ஒரு தூணும் கொண்டதாக உள்ளது. உதாரணமாக இங்கிருந்து சில நகரங்களின் தூரம்: நாக்பூரில் இருந்து அகமதாபாத் 851 கி.மீ, பெங்களூர் 1062 கி.மி, சென்னை 1117 கி.மீ, டெல்லி 1029 கி.மீ,ஐதராபாத் 493 கி.மீ, கோல்கத்தா1118 கி.மீ, மும்பை798 கி.மீ