Friday, 1 August 2014

துவரம் பருப்பு துவையல்!!!

                                                                              Image
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 1/2 கப்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2-3
பூண்டு – 2 பற்கள்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
               முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
             பருப்பானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், பூண்டு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மென்மையாக அரைக்காமல், ஓரளவு அரைத்து இறக்கினால், சுவையான துவரம் பருப்பு துவையல் ரெடி!!!
          இதனை சுடு கஞ்சி மற்றும் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.