Friday 15 August 2014

அல்சரா...நெஞ்செரிச்சலா...கவலை வேண்டாம்!!!

திரிபலா சூரணம்- திரிகடிப் பிரமாணம் அளவு ( பெருவிரல், ஆட்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களை குவித்து எடுத்தால் எவ்வளவு எடுக்க முடியுமோ அந்த அளவு)  எடுத்து இரவு உணவுக்குப் பிறகு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

* பூங்காவிச் செந்தூரம்- சிட்டிகை அளவு ( பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் ஆகிய இரு விரல்களைக் கொண்டு எவ்வளவு எடுக்க முடியுமோ அந்த அளவு)
எடுத்து, காலை மற்றும் இரவு  என இரு வேளைகள், உணவுக்கு முன் தண்ணீர் அல்லது நெய்யில் கலந்து உண்ண வேண்டும்.
           மேற்கண்ட மருந்துகளை ஒரு வாரம் முதல் இரு வாரங்கள் வரை உண்டுவர,  வாய்ப் புண், நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகளிலிருந்து   விடுதலை பெறலாம்.
                                       பாகற்காய், அகத்திக்கீரை, கருவாடு, நல்லெண்ணெய்போன்றவைகளை மருந்துண்ணும் காலங்களில் தவிர்க்க வேண்டும். 
                                           மேற்கண்ட மருந்துகள் எல்லா சித்தா மருந்தகங்களிலும் கிடைக்கும்.