Sunday, 24 August 2014

பயனுள்ள குறிப்புகள்!!!

பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?



சீனாவிலுள்ள பீஜீங்கில் அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அரசக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட பல பொருட்களில் கருவுற்ற அன்றே தனக்குப் பிறக்கப் போவது என்ன குழந்தை என்பதை அறிந்து கொள்ள உதவும் அட்டவணையும் ஒன்று. இந்த அட்டவணையை வைத்து 18 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கருவுற்றால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த அட்டவணையின் மூலப்படிவம் பீஜிங்கிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சீனக் காலண்டரும், ஆங்கிலக் காலண்டரும் ஓரளவிற்கு நெருக்கமாக இருப்பதால் ஆங்கிலக் காலண்டருக்குத் தகுந்தபடி மாற்றியமைக்கப் பட்ட அட்டவணை இதோ... 
  

















கருவுற்ற பெண்ணின் வயது
ஆண் குழந்தை
பெண் குழந்தை
18 வயது
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
ஜனவரி, மார்ச்.
19 வயது
ஜனவரி, மார்ச், ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
பிப்ரவரி, ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர்.
20 வயது
பிப்ரவரி, ஏப்ரல்,மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்.
ஜனவரி, மார்ச், அக்டோபர்.
21 வயது
ஜனவரி.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர்,அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
22 வயது
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஆகஸ்ட்.
ஜனவரி, ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
23 வயது
ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
மார்ச், மே, ஜீன், ஆகஸ்ட், டிசம்பர்.
24 வயது
ஜனவரி, மார்ச், ஜீன், ஜீலை.
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
25 வயது
பிப்ரவரி, மார்ச், ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
ஜனவரி, ஏப்ரல், மே, ஜீலை.
26 வயது
ஜனவரி, மார்ச், ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், டிசம்பர்.
பிப்ரவரி, மே, ஜீலை, செப்டம்பர்,அக்டோபர், நவம்பர்.
27 வயது
பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், நவம்பர்.
28 வயது
ஜனவரி, மார்ச், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
பிப்ரவரி, ஏப்ரல், நவம்பர், டிசம்பர்.
29 வயது
பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர்.
ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
30 வயது
ஜனவரி, நவம்பர், டிசம்பர்
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
31 வயது
ஜனவரி, மார்ச், டிசம்பர்.
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
32 வயது
ஜனவரி, மார்ச், டிசம்பர்.
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
33 வயது
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்.
ஜனவரி, மே, ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
34 வயது
ஜனவரி, மார்ச், நவம்பர், டிசம்பர்.
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
35 வயது
ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.
மார்ச், ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர்.
36 வயது
பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
ஜனவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, செப்டம்பர்.
37 வயது
ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், நவம்பர்.
38 வயது
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீலை, ஆகஸ்ட், நவம்பர்.
ஜனவரி, மார்ச், ஜீன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
39 வயது
ஜனவரி, மார்ச், ஏப்ரல், செப்டம்பர், அக்டோபர்.
பிப்ரவரி, மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.
40 வயது
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், நவம்பர்.
ஜனவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
41 வயது
ஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
பிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், நவம்பர்.
42 வயது
பிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், நவம்பர்.
ஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
43 வயது
ஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
பிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட்.
44 வயது
ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
மார்ச், ஜீலை, நவம்பர், டிசம்பர்.
45 வயது
பிப்ரவரி, மார்ச், ஜீலை, நவம்பர், டிசம்பர்.
ஜனவரி, ஏப்ரல், மே, ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.

அப்பாடா ஸ்கேன் செலவில்லாமல் கண்டுபிடிக்க இப்படி ஒரு வழியா?

மேலே கண்டுள்ள பட்டியலிலுள்ளபடி குழந்தை பிறப்பு சரியாக இருக்கிறதா? என்று குழந்தை பெற்ற பெண்களே கணித்துச் சொல்லுங்களேன்...!

குழந்தை குறையில்லாது பிறக்க திருமூலர் சொல்லும் தகவல்


அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிதுஎன்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன் கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் என்கிறார் திருமூலர்.( மேற்படி தகவல்களை கூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6 ஆயிரம் முதல் கி.மு.100 வரையில் வாழ்ந்ததாக கூறுகிறார்கள்)

ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான் என்கிறார் திருமூலர். தாம்பத்திய உறவின் போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால் குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு நிலையை அறிந்து, பொறுமை காத்து, மனைவியுடன் கூடிக் குலாவி கலவி செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்.

கணவனும், மனைவியும் கூடும் முறையால், எப்படிப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பதற்கு திருமூலர் தரும் விளக்கம்

மனைவியுடன் கணவன் உறவு கொள்ளும்போது அவனது சுவாசமானது சீரான அளவோடு பாய வேண்டும். அவ்வாறு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் குறை எதுவும் இருக்காது.

உறவின் போது ஆணின் வலது நாசி வழியாக சுவாசம் சென்றால் ஆண் குழந்தை உருவாகும். சுவாசம் இடது பக்கம் சென்றால் அது பெண் குழந்தை உருவாக காரணமாகும். இரு நாசியின் வழியாகவும் மூச்சு ஒரே மாதிரி வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கையாக இருக்கும்.



ஆணின் சுவாசமானது அளவில் குறைந்து போனால் பிறக்கும் குழந்தை குள்ள வடிவமாக இருக்கும்.

சுவாசம் இயல்பான நிலையில் இல்லாமல் இளைத்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை முடமாகும்.

சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.

இப்படி, தனது திருமந்திரத்தில் விளக்கம் தரும் திருமூலர், ‘அந்தஉறவின்போது பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறார்.

கூடலின்போது பெண்ணின் வயிற்றில் மலம் சரிவர கழியாமல் தங்கி மிச்சம் இருந்தால் பிறக்கும் குழந்தை மந்த குணம் கொண்டதாக இருக்கும்.

இதுபோல், பெண்ணின் உடலில் சிறுநீர் தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகவும், மலம், சிறுநீர் இரண்டும் சரியான அளவில் தேங்கி இருக்குமானால் பிறக்கும் குழந்தை குருடாகும் என்கிறார்.

சரி... எந்த நிலையில் தான் நல்ல, ஆரோக்கியமான குழந்தை பெற முடியும் என்று கேட்கிறீர்களா? அதற்கு திருமூலரின் பதில்.

தாம்பத்திய உறவின்போது ஆண் &பெண் இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக இருக்க வேண்டும். அவ்வாறு மூச்சு வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை) சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த அழகினை உடையதாக இருக்கும். ஆண் தக்க மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன் எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி, கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில் மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற முடியும். அவ்வாறு இருக்கும் போது, குழந்தையின் தோற்றத்திலும் தான் விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும்.



இப்படி அறிவுரை வழங்கும் திருமூலர், அந்த நேரத்திற்கு எப்படி தயாராவது என்பது பற்றியும் கூறியுள்ளார்.

உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும் தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி, அவற்றை வெளியேற்றி விட வேண்டும்.

ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும் இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில் அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும். அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக் கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை வெளியிட வேண்டும். இதில் வேகம் காட்டுவது வீண் கரு கலைதலுக்கு ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.