Saturday, 9 November 2013

ஆன்ட்ராய்டு போன்களுக்கான இலவச SMS corrector!!!


ஒவ்வொரு நாளும் நமக்கு வரும் SMS களை வரிசைப்படுத்தி தருகிறது இந்த இலவச மென்பொருள்.

மற்றொரு முக்கியமான சேவையையும் வழங்குகிறது. இம்மொன்பொருள். அதாவது நமக்கு வரும் SMS களை பிழை நீக்கம் செய்து, எளிய முறையில் தந்துதவுகிறது. கடினமான வார்த்தைகளை எளிமைப்ப்டுத்தி தருவதால் மிக எளிதாக நமக்கு வரும் குறுஞ்செய்திகளை படித்து பொருள் அறிந்துகொள்ளலாம்.. இம்மென்பொருளைத் தரவிறக்க உங்கள் ஆன்ட்ராய்டு போன் வழியாக இந்த தளம் செல்லவும்.

https://market.android.com/details?id=danem.smstranslator


இன்ஸ்டால் செய்வதற்கு முன் இந்த தளத்தில் உங்களுக்கான கணக்கொன்றைத் தொடங்கவேண்டும். பிறகு ,

அங்கிருக்கும் இன்ஸ்டால் என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்குத் தேவையான இந்த மென்பொருள் நேரடியாக நிறுவிக்கொள்ளலாம்.

நிறுவியபிறகு இன்பாக்சில் உள்ள அனைத்து எஸ்.எம்.எஸ் களிலும் உள்ள பிழைகளை சரிசெய்வதுடன், படிப்பதற்கு ஏற்றவாறு எளிய வார்த்தைகளாக மாற்றி நமக்குக்கொடுக்கிறது.

எஸ்.எம்.எஸ் களை மொழிமாற்றம் செய்தும் படிக்கும் வசதியையும் இம்மொன்பொருள் தருகிறது.

இனி உங்கள் ஆன்ட்ராய்டு போன்களில் கடுமையான வார்த்தைகள் கொண்ட எஸ்.எம்.எஸ்களையும் எளிதாக படிக்கலாம்.