Sunday, 10 November 2013

எளிய இயற்கை வைத்தியம்!!!

எளிய இயற்கை வைத்தியம்:-

மாமரத்துப் பிசினை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். இதை இரவு படுக்கப்போகும் முன் காலிலுள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் சில நாட்களில் பித்த வெடிப்பு சரியாகும்.

கசகசாவை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அடிக்கடி தடவி வந்தால் சில தினங்களில் உடல் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி தோல் இயற்கை நிறம் பெறும்.

வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.

மருதோன்றி இலையை அரைத்து தலையில் ஒரு மணி நேரம் கட்டி வைத்து பின் தலை முழுகினால் கண் சிவப்பு நீங்கும்.

பல் கூச்சம் விலக வேண்டுமா? கொய்யா இலையை மென்று வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்.

காதில் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிட்டால் தண்ணீரில் உப்பைக் கரைத்து காதில் ஊற்ற அவை வெளியேறும்.

கண் வலிக்கு நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.

தூதுவேளை வேரையும் அருகம் புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும், வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுக்கள் மட்டும் பிழிய வலி உடனே நிற்கும்.

பல் வலியா? புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து கால் பங்கு உப்பு சேர்த்துப்பல் துலக்கவும்.

பச்சை வாழைப் பழத்தை உண்ண விக்கல் விலகும்