Tuesday, 26 November 2013

அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்!!!

அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்



கணிதம் என்றாலே வேப்பங்காயாய் கசக்கும் நமக்குத் தான்
இந்த பதிவு. பள்ளியில் இருந்து கல்லூரி வரை கணக்கு என்றாலே
ஒரு வித பயம் தான் ஆசிரியர்கள் கூட சில நேரங்களில் தடுமாறுவது
உண்டு இனி அந்த பிரச்சினை இல்லை. உங்கள் கணித கேள்விகளை
இந்த இணையதளத்தில் கொடுத்தால் உடனடியாக பதில் வரும்
அதுவும் சாதாரணமாக இல்லை. “ Step by Step” என்று சொல்லக்கூடிய
வழிமுறையுடன் அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை
அனைத்துக்கும் பதில் அளிக்கிறது. எந்த கணக்கு போட்டாலும்
விடையை சரியாக அளிக்கிறது.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் இதில் சேரலாம். இலவசமாக
இணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கி உங்கள் கேள்விகளை
கேட்கலாம். கிராப் மட்டும் தான் எனக்கு வராது என்கிறீர்களா அதற்கும்
இவர்களிடம் பதில் உண்டு. ஒவ்வொரு வகையிலும் இலட்சத்திற்கும்
மேற்பட்ட மாதிரி கணக்கும் உள்ளது.

வீட்டுப்பாடம் என்று தனக்கு தெரியாத கணக்கை கொடுக்கும்
ஆசிரியர்களிடம் இருந்து கண்டிப்பாக அப்பாவி மாணவர்களை இது
காப்பாற்றும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும் தங்களுக்கு
எழும் சந்தேகங்களுக்கு இந்த இணையதளம் மிக உதவியாக இருக்கும்.
இணையதள முகவரி : http://www.mathway.com